Home அழகப்பா பல்கலைக்கழகம் தமிழக விஞ்ஞானி (TANSA) விருது

தமிழக விஞ்ஞானி (TANSA) விருது

178
0

தமிழக விஞ்ஞானி (TANSA) விருது

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ஆற்றல் அறிவியல் துறைத்தலைவர் பேரா.சு.கருப்புச்சாமி அவர்களுக்கு “தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்”, நானோ பொருட்கள் மற்றும் ஒளி மின் வேதியியல் துறையில் சிறந்த ஆராய்ச்சிப் பணியையும், பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் 2017 – ஆம் ஆண்டிற்கான “தமிழக விஞ்ஞானி” (TANSA) என்ற விருதை இரசாயன அறிவியல் பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்டு மேற்படி விருதினை கடந்த டிசம்பர் 27-ஆம் நாள் மாண்புமிகு. தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களிடமிருந்து நேரில் பெற்றுக் கொண்டார்..

முனைவர் சு.கருப்புச்சாமி அவர்கள் விலை மலிவான TiO2(டைட்டேனியம் டை-ஆக்ஸைடு) –வை அடிப்படையாக கொண்ட சூரிய மின்கலம் (Solar Cell) தயாரிக்கும் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். மேலும் சுற்றுச்சூழலைத்தூய்மைப்படுத்துவதற்கான ஆராய்ச்சியையும் மேற்கொண்டு வருகிறார். இவர் தனது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணிக்காக சர்வதேச மற்றும் தேசிய அளவிலான அரசு ஆராய்ச்சி நிறுவனங்களான – DST, SERB, DST-SERI, DAE-BRNS, DBT, MHRD-RUSA, AURF ஹிமாத்ரி கெமிக்கல்ஸ் கம்பெனி லிமிடெட், MOHE-மலேசியா ஆகிய நிறுவனங்களிடமிருந்து சுமார் 4.85 கோடி ரூபாய் நிதியுதவியாகப் பெற்றிருக்கிறார். இவர் புகழ்பெற்ற சர்வதேச ஆராய்ச்சிப் பத்திரிக்கைகளில் 130-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தனது ஆராய்ச்சிப் பணியில் இராசயன அறிவியல் பிரிவில் 11 சர்வதேச காப்புரிமைகளைப் பெற்றிருக்கிறார். பல சர்வதேச மற்றும் தேசிய அளவிலான மாநாடுகளில் கலந்து கொண்டு சுமார் 170-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி ஆவணங்களை வழங்கியுள் ளார்.

இவர் ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன், சுவிட்ஸர்லாந்து, தென்கொரியா, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற உலக நாடுகளுக்கு ஆராய்ச்சிப் பயணங்கள் மேற்கொண்டுள்ளார். பல வெளிநாடுகளிலுள்ள பல்கலைக்கழகத்திற்கும், அழகப்பா பல்கலைக்கழகத்திற்குமிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்த உறுதுணையாக இருந்துள்ளார்.

இவர் ஜப்பான் கல்வி அமைச்சகத்தின் விருது, ஆசிய-பயோமாஸ் ஆற்றல் ஆராய்ச்சியாளர் விருது மற்றும் ஜெர்மனி ஹென்கல் இன்னொவே ன் விருது உள்பட பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும் சென்னை அறிவியல் அகாடமியின் Fellow ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here