Home அழகப்பா பல்கலைக்கழகம் சுவாமி விவேகானந்தா உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் சார்பாக ஒருநாள் பயிற்சி முகாம்

சுவாமி விவேகானந்தா உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் சார்பாக ஒருநாள் பயிற்சி முகாம்

193
0

சுவாமி விவேகானந்தா உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் சார்பாக ஒருநாள் பயிற்சி முகாம்

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சுவாமி விவேகானந்தா உயர் ஆய்வு மற்றும் கல்வி மையம் சார்பாக ஒருநாள் பயிற்சி முகாம் அன்று (27.11.2018) நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள இணைப்பு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக அனைத்து துறைகளிலும் உள்ள விவேகானந்தர் மாணவர் படை (கேடட் கார்ப்ஸ்) ஒருங்கிணைப்பாளருக்கான பயிற்சி வழங்கப்பட்டது.  சுவாமி விவேகானந்தா உயர் ஆய்வு மற்றும் கல்வி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமூக பணி துறையின் போராசியர் மற்றும் துறைத்தலைவர் பேராசிரியர் கே.ஆர். முருகன் தனது வரவேற்புரையில் இப்பயிற்சி முகாமின் நோக்கம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது 1. கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துதல் 2. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சொற்பொழிவுஇ கட்டுரை மற்றும் கவிதை எழுதுதல் போன்ற போட்டிகளை நடத்துதல் 3. விவேகானந்தரின் எண்ணங்களையும், கருத்துகளையும் மற்ற தத்துவவாதிகள் மற்றும் எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டு பார்த்து ஆராயச்சி செய்ய மாணவர்களை ஊக்குவித்தல் 4. கிராமப்புறங்களில் தன்னார்வலர்களோடு இணைந்து சமூக பணியை மேற்கொள்வதற்கு மாணவத்தொண்டர்களை உருவாக்குதல் 5. இராமகிருஷ்ண மடம் அல்லது மிஷன் நிபுணர்களுடைய ஒத்துழைப்புடன் விவேகானந்தரால் பரப்பப்பட்ட சிந்தனைகள்இ கருத்துக்கள் மற்றும் தத்துவங்கள் பற்றிய சான்றிதழ் படிப்புகளை நடத்தி அதன் மூலம் விவேகானந்தரின் கருத்துகளை இளைஞர்கள் அறிந்து கொள்ள செய்தல், போன்றவற்றை செயல்படுத்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி அளிப்பதாகும் என்றார்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என். ராஜேந்திரன் தனது தலைமை உரையில் சுவாமி விவேகானந்தரின் சீரிய சிந்தனைகள் தனி மனித உயர்வுக்கும் மற்றும் நாட்டின் உயர்வுக்கும் வழிகாட்டுவன என்றார். விஞ்ஞான வளர்ச்சியிலும் விஞ்ஞான கல்வியிலும் இந்தியா முன்னேற வேண்டும் என்பதில் விவேகானந்தர் உறுதிப்பட நம்பினார். பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தை உருவாக்கியதில் ஜாம்செட்ஜி டாடாவின் பங்கு முக்கியமானது என்றும் சுவாமி விவேகானந்தரின் ஆலோசனைப் படியே டாடா அவர்கள் இந்நிறுவனத்தை உறுவாக்கினார் என்பது குறிப்பிடத் தக்கது என்றும் கூறினார். அழகப்பா பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் சுவாமி விவேகானந்தா உயர் ஆய்வு மற்றும் கல்வி மையத்தை ரூசா (RUSA -Scheme-II) நிதி உதவியுடன் விரிவுபடுத்துவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது என்றும் துணை வேந்தர் தெரிவித்தார்.  இந்த மையத்தின் ஒரு பகுதியாக மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் நன்மைக்காக சுவாமி விவேகானந்தரின் மதிப்புமிக்க கருத்துகள் மற்றும் செயல்களை உள்ளடக்கிய டிஜிட்டல் நூலகம் அமைத்தல், மற்றும்  இந்த மையம் மேலும் வலுப்பெற முறையான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்ககைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தமிழ்நாடு விவேகானந்தர் கலாச்சார அகாடமி மையத்தின் கலாச்சார கல்விப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் திரு எஸ். செந்தில் குமார் தனது சிறப்புறையில் சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்தநாள் விழாவில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் உள்ள ஒன்பது பல்கலைக் கழகங்களில் விவேகானந்தா மையங்கள் நிறுவப்பட்டன என்றும்,  அவற்றில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட விவேகானந்தா மையம் மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார். தேசத்தின் இளைஞர்களுக்கு ஒழுக்கம் மற்றம் சிறந்த பண்புகளை கல்வி மூலம் கற்பித்தல் தற்போதைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது என்றார். விவேகானந்தா மையங்கள் இதற்கான முயற்ச்சிகளை எடுத்து வருகின்றன என்றார். மதசார்பின்மை மற்றும் தேசபக்தியின் முக்கியத்துவத்ததை கற்பிப்பதால் இளைஞர்கள் முன்னேற்றம் அடையவும்; ஒருமைப்பாட்டு கொள்கையை வலுப்படுத்தவும் தேசிய வளர்ச்சியை துரிதப் படுத்தவும் இது உதவும் என்றார்.

சுவாமி விவேகானந்தா உயர் ஆய்வு மற்றும் கல்வி மையத்தின் துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். வசிமலை ராஜா நன்றி கூறினார். பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைக் கல்லூரிகளை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here