Home அழகப்பா பல்கலைக்கழகம் இரத்த தான முகாம் – அழகப்பா பல்கலைக்கழகம்

இரத்த தான முகாம் – அழகப்பா பல்கலைக்கழகம்

227
0

இரத்த தான முகாம் – அழகப்பா பல்கலைக்கழகம்

காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சுருள் சங்கம் மற்றும் HDFC வங்கி, காரைக்குடி கிளை ஆகியவை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த இரத்த தான முகாம் 11.12.2018-அன்று அழகப்பா பல்கலைக்கழக கணிதவியல் துறையில் நடைபெற்றது.  நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் முனைவர்.ஜெ.விமலா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா.ராஜேந்திரன் அவர்கள் இம்முகாமை துவக்கி வைத்தார்கள்.  காரைக்குடி, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் இரத்த வங்கி மருத்துவ அதிகாரி டாக்டர்.வி.அருள்தாஸ் இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார்.  இம்முகாமில், 110 நாட்டுநலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று இரத்த தானம் செய்தார்கள்.

இதனைத் தொடர்ந்து துணைவேந்தர் பேராசிரியர்.என்.ராஜேந்திரன் அவர்கள், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம் மற்றும் தமிழக அரசு இரத்த பரிமாற்ற மையம் ஆகியன இணைந்து நடத்தும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்கு “உங்களின் நிலையை அறிந்து கொள்ளுங்கள்” என்னும் அமைப்பையும் தொடங்கி வைத்தார்கள்.

நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளைஞர் செஞ்சுலுவைச் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். பி.சீனிவாசன் அவர்கள் இம்முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here