Home இது எங்க ஏரியா விஞ்ஞான வேகம் 

விஞ்ஞான வேகம் 

208
0

விஞ்ஞான வேகம் 

சந்திர மண்டலத்தில்
கால்பதிக்க தெரிந்த மனிதனுக்கு
எதிர் வீட்டு இந்திரன் மனதில்
இடம் பிடிக்க தெரியவில்லை

செவ்வாய் கிரகத்தில்
நீர் இருக்கிறதா என்ற ஆய்வில்
ஒரு வாய் தண்ணீருக்காக
ஊர் தாண்டி போகும் அவலம் புரியவில்லை…

கனையத்தில் இன்சுலின் சுரக்க
ஏகப்பட்ட ஆய்வுகள்
இதயத்தில் அன்பு சுரக்க
ஏதேனும் ஏற்பாடு உண்டா?

இடம் விட்டு இடம் தாவும்
ஏவுகணைகள் தயாரிக்கையில்
இல்லை என்று எங்கும்
ஏழ்மை நிலை புரியவில்லை

செயற்கை ரத்தம் தயாரிக்க
சிறப்பான ஏற்பாடு நடக்கையில்
இயற்கை ரத்தம் குடிக்கும்
எந்திர துப்பாக்கிகளை
என்ன செய்யப்போகிறோம் .

அடுத்த கிரகங்கள் பற்றி
ஆராய்ச்சிகள் நடக்கையில்
இந்தப் பூமியை பற்றியும்
எண்ணிப் பார்ப்போமா ?

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here