Home இது எங்க ஏரியா முள்ளும் செருப்பும்

முள்ளும் செருப்பும்

171
0

முள்ளும் செருப்பும்

சில மனிதர்களும் சில நிகழ்வுகளுமே போதும் ஒரு மனிதனின் பாதையை மாற்றவும் தொடங்கவும்

வெளிய வந்தா இத வாங்கி கொடு அத வாங்கி கொடுனு கேட்கக் கூடாதுனு சொல்லிருக்கன்ல

ஏய் அவன ஏண்டி திட்ர. என் மகன் மகனதிகாரத்தில் கேட்க நான் அவளின் கண்டிப்பையும் மீறி, அண்ணே ஒரு லேய்ஸ் தாங்க ,10 ரூவா சார், 5 ரூவாதான்பா, 10 ரூவா சார் வேணுமா வேணாமா.

ஷ்டேசன்லயும் எல்லாமே டபுள்தானா தியேட்டர் மாறியே இங்கயும் பண்றானுங்க இப்ப. என்ன பண்றது கேட்க யாரும் இல்ல, சரி குடுப்பா , அழுவ ஆரம்பிச்சிடுவான்.

ஒன்றை வாங்கி அவன் கையில் கொடுத்து விட்டு ரயிலில் ஏறினோம். சென்னை சென்ட்ரலில் ஏறி எக்மோர் வருவதற்குள் பாக்கெட் காலி.

ஒரு இளைஞனும் ஒரு முதியோரும் எக்மோரில் ஏறினார்கள். எங்கள் சீட்டிர்க்கு எதிர் சீட்டிலே அமர்ந்தனர் இருவரும். முதியவருக்கு 60 முதல் 65 வயது இருக்கும், சிறிது தூரம் சென்ற பின் நான் என் கையில் இருந்த புத்தகத்தை எடுத்து வாசிக்க தொடங்கினேன், பெரியாரும் பகுத்தறிவும் என்ற புத்தகம், அந்த முதியவரும் ஒரு புத்தகதை எடுத்து வாசிக்க தொடங்கினார், என்ன புத்தகம் என்று தெரியவில்லை நியூஷ் பேப்பரினால் அட்டை போட்டிருந்தார், நான்தான் சீன் போடுவதற்க்காக அட்டை போடாமல் வைத்திருந்தேன் பகுத்தறிவாளன் என காண்பிக்க.

அவர் வாசிக்கும் புத்தகத்தை அறிந்துக் கொள்ள கொள்ளா ஆர்வம். ஒருவர் வாசிக்கும் புத்தகத்தை வைத்து அவரின் எண்ணங்களையும் அவரை பற்றியும் தெரிந்துக் கொள்ளலாம் என்பது என் கருத்து.

சிறிது தூரம் சென்ற பின் அந்த இளைஞன் சிகிரெட்டை எடுத்து பற்ற வைத்து ஊதினான், எனக்கோ கோபம் இப்படி பப்ளிக்ல பிடிக்கிறத பாத்துட்டு யாரும் கேட்கவில்லையே என, “சகிப்பு தன்னை ஒன்றே தவறுகளை அனுமதிக்கிறது” போல, நானோ எதிர்த்து கேட்கும் அளவுக்கு திராணியும் வயதும் வாய்ந்தவன் அல்ல, மீண்டும் சிறிது தூரம் சென்ற பின் அடுத்ததை எடுத்து புகைத்தான்.

என் மகன் என்னிடம், அப்பா அது என்னதுப்பா, எனக்கும் வேணும் எனக் கேட்க எப்படி புரிய வைப்பது எனத் தெரியாமல் நான் முழிக்க, என் அருகில் இருப்பவரிடம் சொன்னால் எல்லாம் பேசாம வராங்க நம்ம மட்டும் எப்டி கேட்ப்பது என அடங்கிவிட்டார். ஒருவர் மட்டும் சென்று, சார் லேடிஷ் எல்லாம் இருக்காங்க என்று கெஞ்சினார், அவனோ சரி சரி அடுத்த ஷ்டேஷன்ல இறங்கிடுவேன் போ போய் உட்காரு என்று தெனாவட்டாக பதில் சொல்ல, அந்த முதியவர் சட்டென எழுந்து, அடிச்சு பல்ல எல்லாம் கலட்டிருவேன் நாயே, அனடா சிகரெட்ட என அதட்டியவுடன் அவரை முறைத்துக் கொண்டே கீழே போட்டு மிதித்தான்.

ஆனால் அவர் விடாமல் பப்ளிக் பிளேஸ்ல குப்ப போட்ர அறிவில்ல எடுத்து வச்சு வெளில குப்பைல போடு என சொல்ல சற்று அவமானத்துடன் எடுத்து கையில் வைத்துக் கொண்டு இறங்கினான். கை தட்டி பாராட்ட வேண்டும் என்றது போல் இருந்தது, “உடலில் பலம் உள்ளவர்கள் அனைவருக்கும் மனதில் பலம் இருப்பதில்லை பயம் இருப்பதினால்” என்பது புரிந்தது. அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.

சார் நீங்க கம்யூனிஷ்ட்டா என்று ஆரம்பித்தேன், அவர் சிரித்துக்கொண்டே ஏன் தம்பி கேட்குறிங்க, இல்ல சார் மத்தவங்களுக்காக நீங்க பயப்படாம பேசினிங்கல்ல, அதான் சார் அப்டி கேட்டேன்.

இப்ப எல்லாம் பாதி பேர்க்கு கம்யூனிஷ்ட்னா என்னனே தெரிய மாட்டிக்குது சார், கம்யுனிஷம் பேசுறவங்கள பாக்கவும் முடியறது இல்ல. அவர் சிரித்துக் கொண்டே அன்பே சிவம் படத்துல மாதவன் கேட்ப்பார், சோவியத்தே உடைஞ்சுடுச்சு இன்னும் கம்யூனிசம் பேசுரிங்கலேனு,அதுக்கு கமல் சொல்வார், தாஜ்மஹால் இடிச்சிட்டா காதலிக்கிறத நிருத்திடுவிங்களானு, “தலைவன் அழிந்தவுடன் தொண்டனும் அழிந்தால் அவன் சரியான தலைவனாக இருந்திருக்க முடியாது”. உன் அனுபவத்திரிக்கு உன் கண்ணில் தெரிந்தவர்கள் குறைவாக இருந்திருக்கும்.அப்புறம் கம்யுனிஸ்ட்தா அப்டி கேட்கனும்னு இல்ல தம்பி, மனசுல தைரியம் இருந்து, தப்புன்னு பட்டா யார் வேணும்னா கேட்கலாம்.

ஆனா சார் இந்த சொசைட்டில இப்டி எல்லாம் பேசிட்டு இருந்தா லூசுனு சொல்லுவாங்களே சார்.

இந்த சமூகம் ஒரு மானங்கெட்ட சுயநலக் கோட்பாட்டின் கீழ் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. பொய் சொல்லக் கூடாது தவறு என சொல்லும் சமூகம்தான் வக்கீலிடமும் டாக்டரிடமும் மட்டும் பொய் சொல்லக் கூடாது என பொய் பேச வாய்ப்பினையும் ஏற்படுத்தி தருகிறது.

அவரின் பேச்சு மேலும் கேட்கத் தூண்டியது. பேச்சை மேலும் தொடர்ந்தேன், ஆனா இப்படி எல்லாம் யாரும் தன் பிள்ளைகளுக்கோ தன் மாணவனுக்கோ சொல்லித் தருவதில்லையே சார்.

உன் கையில் இருக்கும் புத்தகமே அதற்கு விடை, அவர்களும் அதே சமூகத்தின் கீழ் வளர்ந்தவர்கள் தானே அதனால்தான் இப்படி.

வேறு பட்ட மனிதர்களை எப்படி சார் புரிஞ்சுகிறது.

உலகில் மூன்று வகையான மனிதர்கள் மட்டுமே, தவறு செய்பவர்கள், தவறை தட்டிக் கேட்பவர்கள், தானும் தவறு செய்யாமல் அடுத்தவர் செய்யும் தவறிலும் தலை இடாதவர்ககள்.

அப்போ பொதுநலமா இருக்கவங்க யார் சார், இந்த உலகில் பொதுநலமா இருப்பவர்கள் என்று யாருமே கிடையாது, ஒருவர் செய்யும் ஒவ்வொரு பொதுநலத்திற்கு பின்னும் ஒரு சுயநலம் இருக்கும்.

சார் நீங்க உங்க பையனுக்கு இப்டி சொல்லிக் கொடுத்திங்களா?

அதிகமான பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு பிரச்சனை வர கூடாது என்றே விருப்புவார்ககள். முள்ளின் அருமை அறிந்து செருப்பை அணிந்து நடப்பவர்கள் செருப்பையும் மீறி முள் குத்தும்போது தான் செருப்பு இல்லாதவரின் வலியை அறிவார்கள், அவர்கள் செருப்பு வாங்கி தரவில்லை என்றாலும் குத்திய முள்ளை ஓரமாக எடுத்து போட்டாலே போதும், ஆனால் மீண்டும் பாதையிலே போட்டு விடுகிறார்கள்.

நீங்க சொல்லி கொடுத்திங்களா இல்லையா சார்?

அவர் சிரித்துக் கொண்டே ஷ்டேசன் வந்துடுச்சுபா, இந்தா இந்த புத்தகத்த வச்சுகோ, இதா என் அட்ரஸ் எதாது வேனும்னா வந்து பாரு என்று சொல்லி இறங்கிவிட்டார். புத்தகத்தின் பெயர் தந்தையும் சமூகமும், முகவரியில் முதியோர் இல்லம்…

Credit goes to சிறுகதைகள்.காம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here