Home இது எங்க ஏரியா அதிரடி வளர்ச்சி… முகேஷ் அம்பானியின் வெற்றிக்கதை..

அதிரடி வளர்ச்சி… முகேஷ் அம்பானியின் வெற்றிக்கதை..

153
0

அதிரடி வளர்ச்சி… முகேஷ் அம்பானியின் வெற்றிக்கதை..

முகேஷ் அம்பானி, ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை தொடங்கி வைத்தார். இந்த சேவை இந்தியா முழுவதும் 1100 நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ‘ஜியோ ஜிகா ஃபைபர் மூலம் 600+ டி.வி சேனல்களும், ஆயிரக்கணக்கான படங்களும், லட்சக்கணக்கான பாடல்களையும் கேட்க முடியும்”.

மேலும் ஹங்காமா என்ற சிறப்பு திட்டத்தின் மூலம், ஜியோ போன் பயன்படுத்துவோர், தங்கள் பழைய போனை 501 ரூபாய்க்கு கொடுத்து அதற்கு பதிலாக புதிய போனை வாங்கிக் கொள்ளலாம்.

இதனால் 1,500 ரூபாய் என்று இருந்த ஜியோ போனின் விலை 501 ரூபாய்க்கு குறைக்கப்பட்டது. ‘இந்தியாவின் அனைத்து மாவட்டங்களுக்கும், ஒவ்வொரு தாலுக்காக்களுக்கும், அனைத்து கிராமங்களுக்கும் எங்கள் சேவையை கொண்டு செல்வதே எங்கள் இலக்கு” என்றார் முகேஷ் அம்பானி.

ஜியோ வாடிக்கையாளர்கள் :

பொது மக்களுக்கான சேவையை செப்டம்பர் 2016ல் ஜியோ துவங்கி வெறும் 2 வருடம் மட்டுமே ஆன நிலையில் இந்நிறுவனத்தில் தற்போது சுமார் 20 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். மேலும் இந்தியாவில் தற்போது 50 கோடி பியூச்சர் போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

வேலைவாய்ப்பு உருவாக்கம் :

ரிலையன்ஸ் ஜியோ சேவை அறிமுகம் செய்த பிறகு நாடு முழுவதும் மறைமுகமாக 10 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

விருதுகளும், மரியாதைகளும் :

  • 2010 – ஆசியா பொதுநல ஸ்தாபன அமைப்பின் மூலம் பிரதான விருந்தில் ‘குளோபல் விஷன் விருது”.
  • என்.டி.டி.வி (இந்தியா) மூலம் 2010ஆம் ஆண்டின் ‘சிறந்த வர்த்தக தலைவர் விருது”.
  • பைனான்சியல் குரோனிக்கிள் அமைப்பின் மூலம் 2010ஆம் ஆண்டின் ‘தொழிலதிபர் விருது”.
  • 2010 – பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறியியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பல்கலைக்கழக பள்ளித்தலைவர் பதக்கம்”.
  • அமெரிக்க இந்திய வர்த்தக ஆலோசனை சபை மூலம் ‘அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சிலின் தலைவர் விருது” போன்ற பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here