Home காலச்சுவடுகள் சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933

சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933

14
0

சீர்காழி கோவிந்த ராஜன் பிறந்த தினம்: 19-1-1933

சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் தமிழ் கர்நாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். இவர் சிவசிதம்பரம், அவையாம்பாள் அவர்களுக்கு 19 ஜனவரி 1933-ல் மகனாகப் பிறந்தார்.

இவர் இளமைப் பருவத்தில் விரும்பிப் பாடிய பாடல்கள் :

தியானமே எனது – தியாகராஜ பாகவதர் பாடிய பாடல், வதனமே சந்திர பிம்பமோ – தியாகராஜ பாகவதர் பாடிய பாடல் ,செந்தாமரை முகமே – பி. யூ. சின்னப்பா பாடிய பாடல், கோடையிலே இளைப்பாறி- எல். ஜி. கிட்டப்பா பாடிய பாடல்.

இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்: தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி

இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி

இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்

பிடித்த ராகங்கள்: லதாங்கி, கல்யாணி, சங்கராபரணம் சீர்காழியில் பிறந்த கோவிந்தராசன் தனது ஆரம்பக்கல்வியை சீர்காழி வாணிவிலாஸ் பாடசாலையில் பயின்றார்.

திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953-ல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

திரைப்படத்திற்காக பாடிய பிரபல பாடல்கள்:

பட்டணந்தான் போகலாமடி- படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை: எம்.வேணு

அமுதும் தேனும் எதற்கு – படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்,இசை: கே.வி.மகாதேவன்

மாட்டுக்கார வேலா – படம்: வண்ணக்கிளி, இசை : கே.வி.மகாதேவன்

வில் எங்கே கணை இங்கே – படம்: மாலையிட்ட மங்கை, இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்,

இராமமூர்த்தி வானமிதில் நீந்தியோடும் வெண்ணிலாவே – படம்: கோமதியின் காதலன், இசை: ஜி.இராமநாதன்

கொங்கு நாட்டுச் செங்கரும்பே – படம்: கோமதியின் காதலன், இசை :ஜி. இராமநாதன்

மலையே என் நிலையே – வணங்காமுடி, இசை: ஜி. இராமநாதன்

ஜக்கம்மா – வீரபாண்டிய கட்டபொம்மன், இசை: ஜி.இராமநாதன்

பட்டணந்தான் போகலாமடி – படம்: எங்க வீட்டு மகாலெட்சுமி, இசை: எம்.வேணு

ஒற்றுமையாய் வாழ்வதாலே (பாகப்பிரிவினை 1959)

எங்கிருந்தோ வந்தான் (படிக்காத மேதை 1960) பாரதியார் பாடல், இசை: கே. வி. மகாதேவன்

ஓடம் நதியினிலே (காத்திருந்த கண்கள்) கோட்டையிலே ஒரு ஆலமரம் (முரடன் முத்து) நல்ல மனைவி நல்ல பிள்ளை (நம்ம வீட்டு லட்சுமி 1966) பாட்டோடு ராகம் இங்கே மோதுதம்மா (அக்கா தங்கை 1969) கண்ணான கண்மணிக்கு அவசரமா(ஆலயமணி 1962) கண்ணன் வந்தான் (ராமு)

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here