Home காலச்சுவடுகள் மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985

48
0

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985

மைக்ரோசாப்டின் விண்டோஸ் 1.0 முதல்முறையாக வெளிவந்த நாள். தற்போது விண்டோஸ் 10 வரை வந்துள்ளது.

16பிட் வரைகலை இடைமுக விண்டோஸ் 1.0 இயங்குதளமானது 20 நவம்பர் 1985 இல் வெளிவிடப்பட்டது. இதுவே மைக்ரோசாப்டின் பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யவல்ல வரைகலை இடைமுகத்தை உடைய இயங்குதளத்தை உருவாக்கும் முயற்சியின் ஓர் அடிக்கல்லாக அமைந்தது. விண்டோஸ் 1.0 இயங்குதளமே விண்டோஸ் குடும்பத்தின் முதலாவது இயங்குதளம் ஆகும்.

மைக்ரோசாப்ட் விண்டோஸ் 1.0 மைக்ரோசாப்ட் டாஸ் இயங்குதளத்தின் மேல் இருந்து இயக்கும் ஓர் இயங்குதளாமாகவே இருந்ததேயன்றித் தனித்தியங்கும் ஓர் இயங்குதளம் அல்ல. இதன் வரைகலைப் பணிச்சூழல் ஆனது மிகவும் மட்டுப்படுத்தப்பட்டு இருந்ததால் நிரல்கள் நேரடியாக கணினியின் அடிப்படை உள்ளீட்டு வெளியீட்டுப் பகுதியூடாக (பயோஸ்) நிரல்களை எழுதவேண்டியிருந்தது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here