Home காலச்சுவடுகள் உலக வங்கி உருவாக்கப்பட்ட நாள்: 27-12-1945

உலக வங்கி உருவாக்கப்பட்ட நாள்: 27-12-1945

29
0

உலக வங்கி உருவாக்கப்பட்ட நாள்: 27-12-1945

உலக வங்கி என்பது வளரும் நாடுகளின் முதலீட்டு திட்டங்களுக்கு கடன்கள் வழங்கும் ஓர் பன்னாட்டு நிதி நிறுவனமாகும். உலக வங்கியின் அலுவல்முறை நோக்கம் தீவிர வறுமையைக் குறைப்பதாகும். இதன் அனைத்து முடிவுகளும் வெளி முதலீடு, பன்னாட்டு வணிகம் ஆகியவற்றை முன்னேற்றுவதிலும் முதலீட்டு நிதியை அமைத்துத் தருவதிலும் ஈடுபாடு கொண்டவையாக இருக்க வேண்டும்.

உலக வங்கி ஐந்து பன்னாட்டு நிறுவனங்களை உள்ளடக்கிய உலக வங்கிக் குழுமத்தின் முதன்மை நிறுவனம் ஆகும். உலக வங்கி உலக வங்கிக் குழுமத்தின் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) மற்றும் பன்னாட்டு மேம்பாட்டுச் சங்கம் (IDA) என்ற இரு நிறுவனங்களை மட்டுமே அங்கமாகக் கொண்டது. உலக வங்கிக் குழுமத்தில் இவற்றைத் தவிர மூன்று நிறுவனங்கள் அடங்கியுள்ளன[4] :பன்னாட்டு நிதிக் கழகம் (IFC), பலதரப்பு முதலீட்டு பொறுப்புறுதி முகமை (MIGA), பன்னாட்டு முதலீட்டு பிணக்குகள் தீர்வு மையம் (ICSID) உலக வங்கியும் உலக வங்கிக் குழுமத்தின் பிற அங்க நிறுவனங்களும் அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டிசியில் தங்கள் தலைமை அலுவலகங்களை அமைக்கப்பெற்றுள்ளன.

தனி நிறுவனமான அனைத்துலக நாணய நிதியம் யும் சேர்த்து உலக வங்கி குழுமம், சிலசமயங்களில் “பிரெட்டன் உட்ஸ் நிறுவனங்கள்” என அழைக்கப்பெறுகின்றன. நியூ ஹாம்சயர் மாநில, பிரெட்டன் உட்ஸில் நடந்த ஐக்கிய நாடுகளின் செலாவணி மற்றும் நிதி மாநாட்டிற்கு பிறகு (1 முதல் 22 ஜூலை, 1944) இன்நிறுவனங்களுக்கு இப்பெயர் வந்தது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here