Home காலச்சுவடுகள் இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா பிறந்த தினம்: 29-12-1942

இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா பிறந்த தினம்: 29-12-1942

31
0

இந்தி நடிகர் ராஜேஷ் கண்ணா பிறந்த தினம்: 29-12-1942

ராஜேஷ் கண்ணா இந்தித் திரைப்பட நடிகர். இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் காங்கிரஸ் அரசியல்வாதி. 1966-ம் ஆண்டு ஆக்ரி கத் என்ற திரைப்படம் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா 1969-ம் ஆண்டு வெளியான ஆராதனா திரைப்படம் மூலம் பிரபலமானார். 163 இந்தித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவற்றில் 22 திரைப்படங்களில் இரண்டு நாயகர்களி்ல் ஒருவராக நடித்துள்ளார். மூன்று முறை பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ள இவரது பெயர் பதினான்கு முறை இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிலிம்பேர் வாழ்நாள் சாதனை விருது இவருக்கு 2005-ல் வழங்கப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் வெற்றிப்படங்களை அடுத்தடுத்து கொடுத்து புகழின் உச்சிக்கே சென்றவர். இவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாக ஆராதனா, அமர்பிரேம், ஆனந்த், கத்தி பதங், ராஸ், பகாரோங் கே சப்னே, இத்தெஃபாக், சச்சா ஜூதா, ராஜா ராணி, பவார்ச்சி ஆகியன அமைந்தன.

2012-ம் ஆண்டு ஜூன் 23 அன்று சில உடல்நலக்கேடுகளுக்காக மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வீடு திரும்பிய கன்னா மறுநாள், ஜூலை 18, 2012 அன்று சிகிட்சை பலனின்றி காலமானார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here