Home ஆன்மீகம் இந்த வார விசேஷங்கள் 25-12-2018 முதல் 31-12-2018 வரை

இந்த வார விசேஷங்கள் 25-12-2018 முதல் 31-12-2018 வரை

16
0

இந்த வார விசேஷங்கள் 25-12-2018 முதல் 31-12-2018 வரை

டிசம்பர் மாதம் 25-ம் தேதியில் இருந்து 31-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.

25-ந் தேதி (செவ்வாய்) கிறிஸ்துமஸ் பண்டிகை

சங்கடஹர சதுர்த்தி

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆகிய தலங்களில் திருவாய்மொழி திருநாள் உற்சவ சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரநாமாவளி கொண்ட தங்க பூமாலை சூடியருளல். சகல ஆலயங்களிலும் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

மேல்நோக்கு நாள். 26-ந் தேதி (புதன்)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் ஆகிய தலங்களில் இராபத்து உற்சவ சேவை.
திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.

கீழ்நோக்கு நாள். 27-ந் தேதி (வியாழன்)

மதுரை கூடலழகர், ஸ்ரீவைகுண்டம் வைகுண்டநாதர் ஆலயங்களில் திருவாய்மொழி சாற்றுமுறை. பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு கண்டருளல். திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் திருமஞ்சன சேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

கீழ்நோக்கு நாள். 28-ந் தேதி (வெள்ளி)

ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை. திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு கண்டருளல். திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.

கீழ்நோக்கு நாள். 29-ந் தேதி (சனி)

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அஷ்டமி பிரதட்சணம். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வரதராஜருக்கு திருமஞ்சன சேவை. திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.

மேல்நோக்கு நாள். 30-ந் தேதி (ஞாயிறு)

மதுரை வடக்குவாசல் செல்லத்தம்மன் உற்சவம் ஆரம்பம். கீழ்திருப்பதி கோவிந்த ராஜப்பெருமாள் சன்னிதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை. இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.

சமநோக்கு நாள். 31-ந் தேதி (திங்கள்)

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் மூலவருக்கு திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here