Home சிறப்பு தகவல்கள் சிவப்பு வெங்காயம் Vs. வெள்ளை வெங்காயம் இரண்டில் எது அதிக நன்மைகளை வழங்கும்

சிவப்பு வெங்காயம் Vs. வெள்ளை வெங்காயம் இரண்டில் எது அதிக நன்மைகளை வழங்கும்

36
0

சிவப்பு வெங்காயம் Vs. வெள்ளை வெங்காயம் இரண்டில் எது அதிக நன்மைகளை வழங்கும்

வெங்காயம் எப்போதும் உங்களை கட்டாயம் அழ செய்யக்கூடிய ஒன்று தான். ஆனால் அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. வெங்காயம் இந்திய உணவுகளில் முக்கிய இடத்தை பெற்றிருக்க கூடிய ஒரு பொருள். ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின்-சி,  ஃபிளவனாய்டுகள் மற்றும் பைட்டோனுயூட்ரின்கள் இருப்பதால் மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவுப் பொருளாகிறது.

வெங்காயத்தில் இருக்கும் ஃப்ளாவனாய்டுகள் நடுக்குவாதம் எனப்படும் பார்கின்சன், பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் போன்ற சில நோய்களின் அபாயத்தை குறைக்கும் தன்மையை பெற்றிருக்கின்றன. இதை தவிர வெங்காயத்தில் நார்சத்து,  ஃபோலிக் அமிலம், ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் பண்புகளை கொண்டிருக்கின்றன. மற்ற அல்லியம் வகையை சார்ந்த காய்கறிகளை விட வெங்காயம் ஆரோக்கியமான ஒன்று. வெள்ளை வெங்காயத்தை பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வெங்காயத்தை பயிர் வழக்கம் கி.மு ஐந்தாயிரத்தில் இருந்து மக்களிடையே காணப்படுகிறது. மேலும், 16-ம் நூற்றாண்டில் பெண்களின் கருவுறாமை பிரச்சனை போன்ற பல நோய்களுக்கு வெங்காயம் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இங்கு வெங்காயத்தின் பயன்களை பார்க்கலாம்.

ஆரோக்கியமான இதயத்திற்கு

இதய நோய் பிரச்சனைக்கு சிறந்த மருந்தாக திகழ்வது வெள்ளை வெங்காயத்தில் ஆரோக்கியமான நன்மைகளில் ஒன்றாகும். இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெள்ளை வெங்காயத்தை உணவில் சேர்த்து கொண்டால் இரத்த உறைதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

புற்று நோயில் இருந்து பாதுகாக்கிறது

வெங்காயம் மற்றும் மஞ்சள் ஒன்றோடு ஒன்று கலப்பதால் கிடைக்கும் இரசாயனம் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. இது குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் இயற்கையாகவே வெங்காயத்தில் இருக்கும் க்யூயர்சிடின் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது. மேலும், இது எல்லா வகையான புற்றுநோய் ஆபத்தையும் தடுக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

Credit goes to தமிழ்.போல்டுஸ்கை.காம்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here