Home சிறப்பு தகவல்கள் ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி?

ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி?

39
0

ரகசிய கேமராக்களை கண்டுபிடிப்பது எப்படி?

ரகசிய கேமராக்கள் பொதுவாக தங்கும் விடுதிகள், பொதுக் கழிவறை மற்றும் குளியலறை, துணிக் கடைகளில் உடை மாற்றும் அறை உள்ளிட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருக்கலாம்.

இதனை எவ்வாறு கண்டறியலாம் என்பது குறித்து காவல்துறை தரப்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரகசிய கேமராக்கள், பொதுவாக அறையின் கதவுகள், மின்விளக்கு, உடைகளை வைக்க பயன்படுத்தபடும் ஹேங்கர், பூச்செண்டுகள் வைக்கப்பட்டுள்ள குவளைகள் என நாம் அதிகம் கவனம் செலுத்தாத இடங்களில் வைக்கப்பட்டிருக்கலாம்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் கேமராக்களை கண்டறிய பல்வேறு மொலைப் ஆப்-கள் செயலில் உள்ளன. அதுபோன்ற சில செயலிகள் மூலம் உங்கள் மொபைல் ஹேக் செய்யப்படலாம் என்பதால், அதிலும் கவனத்துடன் செயல்பட அறிவுறுத்துகிறது சைபர் காவல்துறை. ஏதோ ஒரு இடத்தில் ரகசிய கேமரா இருப்பதைக் கண்டுபிடித்தால், பெண்கள் பதற்றமடையாமல் உடனடியாக புகார் கொடுக்க வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி 3ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என்கிறார்கள் காவலர்கள். நீங்கள் அசந்த நேரத்தில், உங்கள் அந்தரங்கத்தை படம்பிடித்து ஆபாச இணையதளங்களில் காசாக்க காத்திருக்கிறது ஒரு கும்பல்.அவற்றை சில எளிய வழிகளின் மூலம் கண்டறியலாம்.

ஹோட்டல் அறை, உடை மாற்றும் அறைகளில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது ஆள் காட்டி விரலை வைத்தால் விரல் நுனிக்கும், கண்ணாடி பிம்பத்தில் தெரியும் பிம்ப ஆள்காட்டி விரல் நுனிக்கும் சிறிய இடைவெளி இருக்க வேண்டும். அப்படி இல்லையேல், அது கண்ணாடிக்கு பின்னால் இருந்தும் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘இரு பக்க’ கண்ணாடியாகும்.

ஹோட்டல்களில் தங்கும் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைக்க வேண்டும். பின்னர், அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுத்தால் எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் அங்கு ரகசிய கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.

செல்போனில் யாரிடமாவது பேசியபடி அறை முழுவதும் மெதுவாக நடக்க வேண்டும். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா இருப்பது உறுதி.

விளக்குகளை அணைத்து விட்டு கண்ணாடி மீது டார்ச் அடித்துப் பார்த்தால், பின்னால் ஏதேனும் இருக்கிறதா என்பதை அறியலாம்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here