Home சிறப்பு தகவல்கள் தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு!

தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு!

48
0

தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 270 நாள்களாக உயர்வு!    

பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை காலத்தை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணை சமீபத்தில் ( நவ 07, 2016) வெளியிடப்பட்டது.

இது தொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை செயலாளர் எஸ்.சுவர்ணா வெளியிட்டுள்ள அரசாணையில் (கீழே இணைக்கப் பட்டுள்ளது) கூறியிருப்பதாவது.

அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் கடந்த 1.9.2016 அன்று சட்டப் பேரவையில் பேரவை விதி 110-ன் கீழ் அறிவித்தார். அவரது அறிவிப்பின் பேரில், பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை காலம் 6 மாதத்தில்(180 நாட்கள்) இருந்து 9 மாதமாக (270 நாட்கள்) முழு சம்பளத்துடன் உயர்த்த ஆணை பிறப்பிக்கப் படுகிறது. இந்த அரசாணை வெளியிடப் படுவதற்கு முன்னர் (7.11.2016) மகப்பேறு விடுமுறையில் இருக்கும் ஊழியர்கள் 9 மாதம் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here