Home சிறப்பு தகவல்கள் ஜியோபோனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யலாம்

ஜியோபோனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யலாம்

49
0

ஜியோபோனில் வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்யலாம்

ஜியோபோனிற்கு வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளை பயன்படுத்தும் வசதியை வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ அறிவித்து இருந்தது. ரிலையன்ஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான அறிவிப்பை அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

முன்னதாக யூடியூப் மற்றும் ஃபேஸ்புக் செயலிகளை பயன்படுத்தும் வசதி ஜியோபோனில் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட நிலையில், வாட்ஸ்அப் வசதி மட்டும் வழங்கப்படாமல் இருந்து, தற்சமயம் வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கான அறிவிப்பு ரிலைன்ஸ் ஜியோ அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது. ஜியோபோனில் வாட்ஸ்அப் செயலியை டவுன்லோடு செய்ய ஜியோஸ்டோர் சென்று இன்ஸ்டால் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்ததும் சில நொடிகளில் செயலி டவுன்லோடு ஆகி, இன்ஸ்டால் ஆகும். செயலியை பயன்படுத்த ஜியோபோனின் மென்பொருளை அப்டேட் செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் — டிவைஸ் — சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களுக்கு செல்ல வேண்டும்.

Credit goes to மாலைமலர்.காம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here