Home சிறப்பு தகவல்கள் உங்கள் வாய் துர்நாற்றம் உடனடியாக குணமாக இந்த சாதாரண பொருட்கள் போதும்

உங்கள் வாய் துர்நாற்றம் உடனடியாக குணமாக இந்த சாதாரண பொருட்கள் போதும்

50
0

உங்கள் வாய் துர்நாற்றம் உடனடியாக குணமாக இந்த சாதாரண பொருட்கள் போதும்

பழங்காலம் முதலே நம் உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருள்களில் முக்கியமானவை பூண்டு மற்றும் வெங்காயம். இந்த இரண்டு பொருட்களும் சுவையை மட்டும் அதிகரிப்பதில்லை, அதிகளவு ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. இவை எவ்வளவு தான் ஆரோக்கியமானதாக இருந்தாலும் இவற்றால் உங்கள் வாயில் துர்நாற்றம் ஏற்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

வெங்காயம் மற்றும் பூண்டு சாப்பிட்டு விட்டு மற்றவர்களுடன் பேசும்போது அது அவர்களுக்கு மட்டுமன்றி உங்களுக்கும் சங்கடத்தையும் ஏற்படுத்தும். இந்த சூழ்நிலையில் நீங்கள் சாப்பிடும் சில பொருட்கள் பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை சரி செய்யும். எந்தெந்த பொருட்கள் உங்கள் வாய் துர்நாற்றத்தை குணப்படுத்தும் என்பதை இங்கு பார்க்கலாம்.

பூண்டு மற்றும் வெங்காயம் ஏன் வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது?

ஆய்வுகளின் படி பூண்டு மற்றும் வெங்காயத்தில் உள்ள சில வேதிப்பொருட்கள் தான் வாயில் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இவற்றில் இல்லஅல்லிசின், மெதில் சல்பைட் மற்றும் சிஸ்டைன் சல்பாக்ஸைடு போன்ற வேதிப்பொருட்கள் ஆகும். மெதில் சல்பைட் பூண்டு மற்றும் வெங்காயத்தை வெட்டும்போது வெளியேறுகிறது. இவற்றை சாப்பிடும்போது இதில் உள்ள வேதிப்பொருட்கள் இரத்தத்தில் கலந்து மோசமான வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

பால்

ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி பாலானது பூண்டு மற்றும் வெங்காயத்தால் ஏற்படும் வாய் துர்நாற்றத்தை சரிசெய்யும் என்று கூறுகிறார்கள். சாப்பிட்டு முடித்த பின் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிப்பது உங்கள் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை உடனடியாக குறைக்கும். சாப்பிட்டு முடிப்பதற்கும், பால் குடிப்பதற்கும் இடையில் குறைந்தது 15 முதல் 20 நிமிடம் இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.

Credit goes to தமிழ்.போல்டுஸ்கை.காம்

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here