Home சிறப்பு தகவல்கள் அதிகரிக்கும் கார் விபத்துக்கள்… காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?

அதிகரிக்கும் கார் விபத்துக்கள்… காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?

47
0

அதிகரிக்கும் கார் விபத்துக்கள்… காரணம் என்ன? தவிர்ப்பது எப்படி?

நாளுக்கு நாள் தமிழகத்தில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பொதுவாக இந்த மாதிரியான விபத்துக்களில்அதிகம் சிக்குவது கார்கள் தான். அதிலும் சொந்த பயன்பாட்டிற்க்காக வாங்கிய வண்டிகளே அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம். ஏன் இந்த மாதிரியான விபத்துகள் ஏற்படுகின்றன, அதை எப்படி தவிர்ப்பது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போமா…

காரணம் தான் என்ன?

சொந்த வாகனங்களை வைத்திருப்பவர்கள் பெரும் பாலும் தினமும் காரை ஓட்டுவது இல்லை. வாரத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ எடுத்து பக்கத்தில் உள்ள இடங்களுக்கு மட்டும் சென்று வருவார்கள் அவ்வளவு தான். ஆதலால் அவர்களுக்கு சாலைகளில் வாகனம் ஓட்டும் போது போதுமான கட்டுப்பாடு கிடைப்பது கிடையாது. காரின் டயர் மற்றும் பிரேக் போன்றவற்றை முறையாக பராமரிப்பது கிடையாது.

தொலை தூரங்களுக்கு செல்லும் போது மிகவும் வேகமாக செல்வதால் அந்த சாலைகள் அவர்களுக்கு பழக்கம் இல்லாததால்அதில் இருக்கும் குழிகள் இருப்பது தெரியாததால் தீடீரென காரைக் கட்டுபடுத்த இயலாமல் எங்காவது மோதி விடுகிறார்கள்.
காரை அடிக்கடி ஒட்டாததால் சில நேரங்களில் பிரேக்கிற்க்கு பதில் ஆக்ஸிலேட்டரை பதட்டத்தில் அமுக்கி விடுவார்கள்.

இதை தவிர்ப்பது எவ்வாறு?

பொதுவாக அடிக்கடி காரை ஒட்டாதவர்கள் ஆட்டோ கியர் காரை உபயோகப் படுத்துவது நல்லது. அதை எந்த சூழ்நிலையிலும் கட்டுப்படுத்துவது எளிது. இதில் மைலேஜ் பார்க்க கூடாது. இது நமது உயிர் மற்றும் சாலைகளில் செல்லும் மற்றவர்களில் உயிர் சம்மந்தப்பட்டது.

பழக்கமில்லாத சாலைகளில் வாகனம் ஓட்டும் போது மிதமாக வேகத்தில் செல்வது நல்லது.வாகனத்தை தொலை தூர பயணத்திற்க்கு பயன்படுத்தும் போது டயர், மற்றும் பின்சைகை விளக்குகள் சரியாக எரிகிறதா என்று பார்ப்பது மிகவும் முக்கியம்.  லாரிகளின் பின்னாலும் அரசு பேருந்தின் பின்னாலும் தொடர்ந்து செல்வது மிகவும் ஆபத்து. ஏனென்றால் பெரும்பாலும் இவைகளில் பிரேக் விளக்குகள் எரிவது இல்லை. அதனால் விபத்து ஏற்படுவது எளிது.

நான்கு வழிச் சாலைகளில் ஒரு லேனில் இருந்து மற்றொருலேனிற்க்கு மாறூம் போது பின்னால் எதுவும் வாகனம் வருகிறதா என்று பார்த்துமாறவும்.
அடிக்கடிபின்னால்வரும்வாகனங்களைகவனிக்கவும்மறக்ககூடாது. நமது சாலைகளில் 100கிமீ வேகத்திற்கு மேல் பயணம் செய்வதை தவிர்க்கவும். ஏனென்றால் நமது சாலைகள் அந்த வேகத்திற்க்கு மேல் பயணிக்க உகந்தது அல்ல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here