Home மகளிர் மட்டும் மாலை நேர ஸ்நாக்ஸ் ஹராபாரா கபாப்

மாலை நேர ஸ்நாக்ஸ் ஹராபாரா கபாப்

51
0
மாலை நேர ஸ்நாக்ஸ் ஹராபாரா கபாப்

பாலக்கீரை, பச்சைப்பட்டாணியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று பாலக்கீரை, பச்சைப்பட்டாணி வைத்து சத்தான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாலக்கீரை – 2 கப்,
மீடியம் அளவு உருளைக்கிழங்கு – 3
தக்காளி – 2 ,
பச்சைப் பட்டாணி – 3/4 கப்,
சாட் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன்,
ஆம்சூர் தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது அல்லது பொடியாக நறுக்கியது – 2 டீஸ்பூன்,
கடலை மாவு – 2 1/2 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

  • தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • உப்புத் தண்ணீரில் கீரையை கழுவி நன்கு வடிகட்டி குளிர்ந்த நீரில் போட்டு வைக்கவும். பிறகு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • கடாயில் கடலை மாவை அதன் கலர் மாறும் வகையில் நல்ல மணம் வரும்வரை வறுக்கவும். மிகவும் சிவந்துவிடக்கூடாது.
  • உருளைக்கிழங்கையும், பட்டாணியையும் வேக வைத்து கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து தக்காளியையும் உருளைக்கிழங்கையும் சீவி போடவும்.
  • இத்துடன் பச்சை பட்டாணி, மிளகாய் விழுதையும் சேர்க்கவும்.
  • இந்த கபாப் கலவையை மத்தால் நன்கு மசிக்கவும்.
  • இத்துடன் காரப் பொடி, வறுத்த கடலை மாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இதனை உருண்டையாக தட்டி வைக்கவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி அதில் இந்த கபாபை போட்டு நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
  • சூப்பரான ஹராபாரா கபாப் ரெடி. இதனை சட்னி, சாஸுடன் பரிமாறவும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here