Home மகளிர் மட்டும் மாலை நேர டிபன் சில்லி சப்பாத்தி

மாலை நேர டிபன் சில்லி சப்பாத்தி

54
0

மாலை நேர டிபன் சில்லி சப்பாத்தி

தேவையான பொருட்கள் :

சப்பாத்தி – 2,
வெங்காயம் – 1,
பச்சை மிளகாய் – 1,
சில்லி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
சோயா சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
தக்காளி சாஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
சிவப்பு ஃபுட் கலர் – 1 துளி,
கொத்தமல்லித்தழை- கால் கட்டு,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை :

  • ஒரு பாத்திரத்தில் சப்பாத்தியை சின்னத் துண்டுகளாகப் பிய்த்து போட்டு வைக்கவும்.
  • வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் உப்பு, சில்லி சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து ஃபுட் கலரில் சிறிது தண்ணீர் கலந்து, அதையும் சேர்க்கவும்.
  • பிறகு அதில் சப்பாத்தி துண்டுகளைப் போட்டுக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
  • சூப்பரான மாலை டிபன் சில்லி சப்பாத்தி ரெடி.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here