Home மகளிர் மட்டும் பாரம்பரிய சர்க்கரை பிஸ்கெட் செய்வது எப்படி

பாரம்பரிய சர்க்கரை பிஸ்கெட் செய்வது எப்படி

68
0

பாரம்பரிய சர்க்கரை பிஸ்கெட் செய்வது எப்படி?

என்னென்ன தேவை?
மைதா – 175 கிராம்,
பொடித்த சர்க்கரை – 115 கிராம்,
வெண்ணெய் – 115 கிராம்,
பால் – தேவைக்கு,
சோடா உப்பு – 1/2 டீஸ்பூன்,
சிவப்பு கலர் எசென்ஸ் – சில துளிகள்,
வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்,
மேலே தூவ சர்க்கரை – சிறிது.

எப்படிச் செய்வது?

வெண்ணெயையும், சர்க்கரையையும் எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நுரைக்க அடிக்கவும். இத்துடன் மைதா, சோடா உப்பு, பேக்கிங் பவுடர், வெனிலா எசென்ஸ் சேர்த்து சிறிது சிறிதாக பால் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். சிறிது சிவப்பு கலர் எசென்ஸை ஊற்றி நன்கு பிசையவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அதை கைகளால் அழுத்தி பேக்கிங் டிரேயில் இடைவெளி விட்டு அடுக்கி, அதன் மேல் சர்க்கரையைத் தூவவும். மைக்ரோவேவ் அவனில் வைத்து 18-20 நிமிடம், 200 டிகிரி செல்சியஸில் வேகவைத்து எடுத்து, ஆறியதும் பரிமாறவும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here