Home மகளிர் மட்டும் பருப்புக்கீரை பருப்பு உருண்டைக் குழம்பு

பருப்புக்கீரை பருப்பு உருண்டைக் குழம்பு

51
0

பருப்புக்கீரை பருப்பு உருண்டைக் குழம்பு

என்னென்ன தேவை?

பருப்புக்கீரை 1 கப்,

ஊற வைத்து, அரைத்த கடலைப்பருப்பு 1 கப்,

பொடியாக நறுக்கிய வெங்காயம் 2,

பச்சை மிளகாய் 3,

கறிவேப்பிலை,கொத்தமல்லி சிறிது,

புளி எலுமிச்சை அளவு,

மிளகாய் தூள் 2 டேபிள்ஸ்பூன்,

எண்ணெய் 15 மி.லி.,

வெந்தயம் 1 டீஸ்பூன்,

கடுகு 1 டீஸ்பூன்,

பொடியாக நறுக்கிய தக்காளி 2,

நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்,

உப்பு தேவைக்கேற்ப.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் அரைத்த பருப்பு, சுத்தம் செய்து ஆய்ந்த பருப்புக் கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துப் பிசையவும். சின்னச் சின்ன உருண்டைகளாக்கி, ஆவியில் வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் தாளிக்கவும். கறிவேப்பிலை, சிறிது வெங்காயம் சேர்த்துப் பொன்னிறத்துக்கு வதக்கவும். தக்காளி சேர்க்கவும். கொதித்ததும் புளித் தண்ணீர், மிளகாய் தூள், உப்பு சேர்த்து மேலும் சில நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் ஆவியில் வேக வைத்த உருண்டைகளை மெதுவாகச் சேர்க்கவும். இறக்கும் போது 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு, இன்னும் கொஞ்சம் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here