Home மகளிர் மட்டும் சோள ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி

சோள ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி

61
0

சோள ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி

தேவையான பொருட்கள் :

மக்காசோள ரவை – ஒரு கப்,
கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை, பெருங்காயம் – சிறிதளவு,
தேங்காய் துருவல் – அரை கப்.

செய்முறை :

  • கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • நன்றாக கொதி வந்ததும் பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்துவிட்டு, தேங்காய்த் துருவல், உப்பு போட்டு கொதிக்க விடவும்.
  • தண்ணீர் கொதித்ததும் சோள ரவையைப் போட்டு நன்றாகக் கிளறி மூடிவைக்கவும். இந்த ரவை வேக தண்ணீர் அதிகம் எடுத்துக் கொள்ளும்.
  • அடுப்பை ‘சிம்’மில் வைத்து, அடிக்கடி திறந்து கிளறி விடவும். மாவு, கொழுக்கட்டை பிடிக்கும் பதத்துக்கு வந்ததும் இறக்கி ஆற வைக்கவும்.
  • ஆறிய மாவு பிடிக்கும் பதத்தில் வந்ததும் கொழுக்கட்டைகள் பிடித்து இட்லி சட்டியில் வைத்து ஆவியில் 12 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
  • சூப்பரான சோள ரவை பிடி கொழுக்கட்டை ரெடி.
  • இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சட்னி நல்ல காம்பினேஷன்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here