Home மகளிர் மட்டும் செம்பருத்தியால் உடலில் ஏற்படும் நன்மைகள்

செம்பருத்தியால் உடலில் ஏற்படும் நன்மைகள்

46
0

செம்பருத்தியால்     உடலில் ஏற்படும்     நன்மைகள்

இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் சில ஆரோக்கியங்கள் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளது. செம்பருத்தியை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் உடலில் ஏற்படும். சோர்வு நீங்கும். செம்பருத்தியின் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து தேநீராக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தம் கட்டுப்படுத்தப்படும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும். மேலும் சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். செம்பருத்தியின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டதாகும். இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

செம்பருத்தி இலைகள் மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வழிமுறைகளிலும் கையாளப்பட்டு வருகிறது. அலங்கார காணிக்கைகள் ஆகவும், தோட்டங்கள் மற்றும் பூங்காவின் நிலங்களை அழகுபடுத்தும் போதும் செம்பருத்தி பயன்படுகிறது. செம்பருத்தி இலைகள் பல்வேறு வழிமுறைகளில், மாறுபட்ட பயன்பாடுகளுக்காக செயல்முறைப்படுத்தப் பட்டு வருகின்றன. மெக்ஸிகன் வகை உணவுகளை அலங்காரம் செய்ய காய்ந்த செம்பருத்தி இலைகள் பயன்படுகின்றன. செம்பருத்தி பூவிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் பல்வேறு நாடுகளில் பல்வேறு பெயர்களில் புகழ் பெற்று விளங்குகிறது. ஆயுர்வேதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தி உயர்ந்த மருத்துவ குணம் கொண்டவைகளாவும், இருமல், முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்றவற்றிற்கு அருமருந்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன. செம்பருத்தியில் ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருட்கள் அதிகமாக இருப்பதால், மூப்பினை தள்ளிப் போக வைக்கும் சக்தி அவற்றிற்கு உள்ளன. செம்பருத்தி இலையைக் கொண்டு தேநீர் சாப்பிடுவது நமக்கு உற்சாகத்தை ஊற்றெடுக்க வைக்கும்.

முடி உதிர்தலை தடுத்தல் :

செம்பருத்தி இலைகள் மற்றும் பூவின் இதழ்களை அரைத்து செய்யப்பட்ட கலவை முடி உதிர்வதை தடுப்பதற்கான இயற்றையான பொருளாக உள்ளது. அது முடியின் நிறத்தை கருமையாக வைத்திருக்கவும், ஷாம்பு போட்ட பின்னர் தலைக்கு போடும் போது பொடுகுகளை நீக்கவும் உதவுகிறது.

செம்பருத்தி தேநீர் :

செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்பட்ட தேநீர் பல்வேறு நாடுகளிலும் அதன் மருத்துவ குணத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிறுநீரகத்தில் பிரச்னைகளின் போது, இயற்கையான முறையில் அதனை சரி செய்ய சர்க்கரை இல்லாமல் இந்த செம்பருத்தி தேநீரை பருக வேண்டும். மற்றும் மன அழுத்தத்துடன் இருக்கும் வேளைகளில் நம்மை சாந்தப்படுத்தவும் இந்த தேநீர் உதவுகிறது.

செம்பருத்தியில் சரும அழகு :

சரும பாதுகாப்பு அழகு சாதன பொருட்களில், சரும பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் பொருட்களை செம்பருத்தி கொண்டிருக்கிறது. சீன மருத்துவத்தில், செம்பருத்தி இலைகளில் இருந்து எடுக்கப்படும் சாறு சூரிய-கதிருக்கு எதிரான புறஊதாக் கதிர்வீச்சினை ஈர்க்கவும் மற்றும் தோலில் ஏற்படும் சுருக்கங்களை அகற்றவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

காயங்களை குணமாக்கும்

காயங்களை குணப்படுத்துதல் திறந்த காயங்கள் மற்றும் புற்றுநோயினால் உருவான காயங்களின் மேல் போடுவதற்காக செம்பருத்தியில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணைய் பயன்படுகிறது. புற்றுநோயின் ஆரம்ப காலங்களில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. திறந்த காயங்களை வேகமாக குணப்படுத்த செம்பருத்தி சாறு உதவுகிறது.

மூப்பினை தள்ளிப் போடுதல் :

செம்பருத்தி இலைகளில் எதிர்ப்பு பொருட்கள் மிகவும் அதிக அளவில் உள்ளன. இந்த பொருட்கள் உங்கள் உடலிலுள்ள கிருமிகளை எதிர்த்து நாசம் செய்யும் வல்லமை படைத்தவையாக இருப்பதால், உங்களுக்கு வயதாவது தள்ளி வைக்கப்பட்டு, நீங்கள் நீண்ட இளமையுடன் இருக்க வைக்க உதவுகிறது.

வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க…

அஜீரணக் கோளாறால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

பெண்களுக்கு…

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் கருவுறாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்.

நீர் சுருக்கு நீங்க…

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.

இருதய நோய்க்கு…

இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here