Home மகளிர் மட்டும் செட்டிநாடு பரோட்டா

செட்டிநாடு பரோட்டா

46
0

செட்டிநாடு பரோட்டா

என்னென்ன தேவை?

கோதுமை மாவு – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
பீட்ரூட் – 1/2,
கேரட் – 2,
உருளைக்கிழங்கு – 1,
வெங்காயம் – 1,
தக்காளி – 1.

செட்டிநாடு மசாலாப் பொடி…

காய்ந்தமிளகாய் – 4,
தனியா – 1 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
கருமிளகு – 5,
இலவங்கப்பட்டை – 1,
கல் பாசி – 1,
நட்சத்திர சோம்பு – 1/2,
ஏலக்காய் – 1,
கிராம்பு – 2,
பிரிஞ்சி இலை – 1,
தேங்காய்த்துருவல் – 2 டீஸ்பூன்.

அனைத்தையும் வெறும் கடாயில் மிதமான தீயில் வறுத்தெடுத்து அரைத்துக் கொள்ளவும்.

எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, உப்பு சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து அரைமணி நேரம் மூடி வைத்து ஊற விடவும். உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும். பீட்ரூட், கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும். தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கி, கேரட், பீட்ரூட் சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் உருளைக்கிழங்கு, செட்டிநாடு மசாலாத்தூள், உப்பு சேர்த்து பச்சைவாசனை போக வதக்கி இறக்கவும். பிசைந்த மாவை சம அளவு உருண்டைகளாக பிரித்து, பூரி அளவிற்கு திரட்டி, அதன் மீது செட்டிநாடு மசாலா கலவையை வைத்து நன்கு மூடி, கையால் தட்டி மெதுவாக சற்று கனமான பரோட்டாவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here