Home மகளிர் மட்டும் சூப்பரான மதிய உணவு வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி?

சூப்பரான மதிய உணவு வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி?

48
0

சூப்பரான மதிய உணவு வெஜிடபிள் புலாவ் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி – 2 கப்

தனியாப் பொடி – 2 டீஸ்பூன்

கரம் மசாலாபொடி – 1 டீஸ்பூன்

சோம்பு – 2 டீஸ்பூன்

தனி மிளகாய்ப் பொடி- தேவைகேற்ப

உப்பு- தேவைகேற்ப

கேரட் – 100 கிராம்

குடைமிளகாய் –  சிறியது 1

வெங்காயம் – 2

பீன்ஸ் – 100 கிராம்

உரித்த பட்டாணி – 1/2 கப்

தக்காளி – 3

காலிபிளவர் – பாதி

கொத்தமல்லி – சிறிதளவு.

அரிசியுடன் தாளிக்க :

ஏலக்காய் – 6

பட்டை – 4

கிராம்பு- 6

வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

  • கொத்தமல்லி, காலிபிளவர், வெங்காயம், தக்காளி, பீன்ஸ், குடைமிளகாய், கேரடை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
  • பீன்ஸ், கேரட்டை தனியாக வேகவைத்து கொள்ளவும்.
  • கு‌க்க‌ரி‌ல் வெண்ணெயை போட்டு லேசாக உருகியதும் சோம்பு, ஏலக்காய் பட்டை கிராம்பு போட்டு தாளித்த பின்னர் ஊறவைத்த அரிசியைப் போட்டு, வாசனைவரும் வரை லேசாக வறுக்கவும். 1 : 2 என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். தண்ணீர் நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயைக் குறைத்து வைக்க வேண்டும். அ‌ரி‌சியை உ‌தி‌ரியாக வேக வை‌த்து இற‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.
  • வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • இதற்குள் காரட் பீன்ஸை குக்கரில் ஆவியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதால் காய்கறிகளின் சத்து வீணாகாமல், குழையாமல், நிறம் மாறாமல் இருக்கும்.
  • வெங்காயம் வதங்கிய பிறகு, குடமிளகாய், பட்டாணி, காலிபிளவர் போட்டு நன்கு வதக்கவும். நிறம் மாறாமல், மிருதுவாக ஆன பின் கேரட், பீன்ஸ் போட்டு, பொடி வகைகளையும் போட்டு வதக்கவும். காய்கறி கலவையை அதிகமா வதக்க கூடாது.
  • கடைசியில் தக்காளி சேர்த்து வதக்கி, உப்புப் போட்டு பின் கீழே இறக்கி வைக்கவும்.
  • ஒரு அகன்ற பாத்திரத்தில் தயாராக இரு‌க்கு‌ம் சாதத்தையும், காய்கறிகளையும் போட்டு கலக்கவும்.
  • நன்கு கலந்த பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
  • சூப்பரான வெஜிடபிள் புலாவ் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here