Home மகளிர் மட்டும் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஓட்ஸ் கிச்சடி

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஓட்ஸ் கிச்சடி

40
0

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஓட்ஸ் கிச்சடி

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்தது ஓட்ஸ். இன்று ஓட்ஸை வைத்து சூப்பரான சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – 2 கப்

பச்சைப்பட்டாணி – 1/2 கைப்பிடி

கேரட் – சிறியது ஒன்று

சின்ன வெங்காயம் – ஐந்தாறு

தக்காளி – பாதி

இஞ்சி – ஒரு சிறிய துண்டு

பூண்டு – 2 பற்கள்

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் தூள் – சிறிது

உப்பு – தேவைக்கு

கொத்துமல்லி இலை – ஒரு கொத்து

எலுமிச்சை சாறு – சிறிது

தாளிக்க :

எண்ணெய்,

கிராம்பு – 3,

பிரிஞ்சி இலை – 1,

சீரகம், கடலைப்பருப்பு, முந்திரி, பெருங்காயம், கறிவேப்பிலை

செய்முறை :

  • ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.
  • பச்சைப் பட்டாணியை முதல் நாளிரவே ஊற வைத்துவிடவும்.
  • கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • இஞ்சி,பூண்டை  தட்டிக்கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் போட்டு தாளித்து விட்டு, இஞ்சி பூண்டு சேர்த்து   வதக்கவும்.
  • அடுத்து வெங்காயத்தை    போட்டு   வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, காய்கறிகள், பட்டாணியை சேர்த்து     வதக்கவும்.
  • காய்கறிகள் பாதியளவு வெந்தவுடன் ஒரு பங்கு ஓட்ஸ் பொடிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என ஊற்றிவிட்டு, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கிவிட்டு கொதி      வரும்வரை     மூடி வைக்கவும்.
  • கொதி வந்ததும்,ஓட்ஸ் பொடியை லேசாக தூவியவாறு கொட்டிக்கொண்டே விடாமல் கிளறி விடவும்.
  • முழுவதையும் கொட்டி கிண்டிய பிறகு தீயைக்குறைத்துவிட்டு இரண்டொருதரம் கிளறி விட்டு எலுமிச்சை சாறு விட்டு, கொத்துமல்லி தூவி இறக்கவும்.இப்போது  சுவையான     ஓட்ஸ்    கிச்சடி     தயார்.
  • தேங்காய் சட்னி, சாம்பாருடன் சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here