Home மகளிர் மட்டும் சத்து நிறைந்த கருப்பட்டி பூர்ணம் கொழுக்கட்டை

சத்து நிறைந்த கருப்பட்டி பூர்ணம் கொழுக்கட்டை

42
0

சத்து நிறைந்த கருப்பட்டி பூர்ணம் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – ஒரு கப்,
கருப்பட்டி – அரை கப்,
தேங்காய் துருவல் – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் – அரை டீஸ்பூன்,
பொட்டுக்கடலை மாவு – 2 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
தண்ணீர் – ஒன்றே கால் கப்,
உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை:

  • கடாயில் தண்ணீர் விட்டு… உப்பு சேர்த்து, சிறிதளவு எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். கொதித்து வரும்போது அரிசி மாவு தூவி, கட்டி இல்லாது கெட்டியாகும் வரை கிளறி எடுத்து ஆறவிடவும்.
  • கடாயில் கருப்பட்டியுடன் தண்ணீர் சேர்த்து சூடாக்கி, கருப்பட்டியை கரையவிட்டு வடிகட்டி, இத்துடன் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொட்டுக்கடலை மாவு சேர்த்து பூரணமாக கிளறி எடுக்கவும்.
  • கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, மாவு கலவையில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம்போல் செய்து, அதன் நடுவில் பூரணம் கொஞ்சம் வைத்து மூடவும்.இவ்வாறு அனைத்தையும் செய்து வைக்கவும்.செய்து வைத்த கொழுக்கட்டைகளை ஆவில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.சத்தான கருப்பட்டி கொழுக்கட்டை ரெடி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here