Home மகளிர் மட்டும் சத்தான மாலை நேர டிபன் ஓட்ஸ் கார பணியாரம்

சத்தான மாலை நேர டிபன் ஓட்ஸ் கார பணியாரம்

45
0

சத்தான மாலை நேர டிபன் ஓட்ஸ் கார பணியாரம்

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – 1 டம்ளர்

பச்சரிசி மாவு – 1 டம்ளர்

ரவை – 1/4 கப்

தயிர் – 1/2 கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

எண்ணெய் – 1 தேக்கரண்டி

கடுகு – 1 தேக்கரண்டி

கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி

வெள்ளை உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் – 2

இஞ்சி, பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 1/2 இணுக்கு

பெருங்காயம் – சிறிதளவு

வெங்காயம் – 2.

செய்முறை :

  • வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி   கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் ஓட்ஸையும் ரவையையும் தனித்தனியாக போட்டு வறுத்து ஒன்றாகத் திரிக்கவும்.
  • அரைத்த ஓட்ஸ் கலவையை ஒரு பாத்திரத்தில் கொட்டி அதனுடன் அரிசிமாவு, தயிர், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு     வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்கின பொருட்களை ஓட்ஸ் கலவையுடன் சேர்த்து நன்றாக     கலக்கவும்.
  • அடுப்பில் குழிப்பணியாரச்சட்டியை வைத்து எண்ணெய் விட்டு ஓட்ஸ் மாவை ஒவ்வொரு குழியிலும் விடவும். வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைத்து     எடுக்கவும்.
  • சுவையான ஓட்ஸ் கார பணியாரம்  தயார்.
  • மிளகாய்ப்பொடி, தக்காளி சட்னி, சட்னியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here