Home மகளிர் மட்டும் சத்தான டிபன் தினையரிசி முருங்கைக்கீரை அடை

சத்தான டிபன் தினையரிசி முருங்கைக்கீரை அடை

46
0

சத்தான டிபன் தினையரிசி முருங்கைக்கீரை அடை

தேவையான பொருட்கள் :

தினையரிசி – 250 கிராம்.
துவரம் பருப்பு – 200 கிராம்.
மிளகாய் – 10.
உப்பு – தேவையான அளவு.
நறுக்கிய வெங்காயம் – 1 கப்.
தேங்காய் துருவல் – அரை கப்.
முருங்கைக்கீரை – 1 கப்.
நல்லெண்ணெய், பெருங்காயம் – தேவையான அளவு.

செய்முறை :

  • முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
  • வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.
  • தினையரிசி, துவரம் பருப்பு ஆகியவற்றை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின்னர் மிளகாய் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்.
  • அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வெங்காயம், தேங்காய் துருவல், முருங்கைக்கீரை, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • சத்தான சுவையான தினையரிசி முருங்கைக்கீரை அடை ரெடி.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here