Home மகளிர் மட்டும் சத்தான சுவையான வெஜிடபிள் பருப்புக் கஞ்சி

சத்தான சுவையான வெஜிடபிள் பருப்புக் கஞ்சி

50
0

சத்தான சுவையான வெஜிடபிள் பருப்புக் கஞ்சி

தேவையான பொருட்கள் :

கேரட் – ஒன்று
பீன்ஸ் – 5
முட்டைக்கோஸ் – சிறிய துண்ட
பெங்களூரு தக்காளி – சிறியது 1
துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – சிறிதளவு
மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை
தண்ணீர் – 100 மில்லி.

செய்முறை :

  • கேரட், கோஸ், பீன்ஸ், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் நறுக்கிய கேரட், கோஸ், பீன்ஸ், தக்காளியை போட்டு அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  • இதேபோல் பருப்பையும் தனியாக நன்கு குழைய வேகவைத்து கொள்ளவும்.
  • வெந்த பருப்பை நன்றாக மசித்து அதை வெந்த காய்கறிகளுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • அடுத்து அதில் மிளகுத்தூள், போதுமான உப்பு சேர்த்து மத்தால் நன்கு மசிக்கவும், அல்லது மிக்ஸியில் லேசாக அரைக்கவும்.
  • இப்போது சத்தான வெஜிடபிள் பருப்புக் கஞ்சி தயார்.

குறிப்பு:

பருப்புக்குப் பதில் வெந்த சாதம் அல்லது கோதுமைக் கஞ்சி சேர்த்துக் கடைந்து குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here