Home மகளிர் மட்டும் சத்தான சுவையான முட்டை ஓட்ஸ் ஆம்லெட்

சத்தான சுவையான முட்டை ஓட்ஸ் ஆம்லெட்

57
0

சத்தான சுவையான முட்டை ஓட்ஸ் ஆம்லெட்

காலையில் நல்ல ஆரோக்கியமான உணவை உட்கொள்ள நினைத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து சாப்பிடுங்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1 கப்

முட்டையின் வெள்ளைக்கரு – 4

மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்

பால் – 1/2 கப்

ஆலிவ் ஆயில் – 1 டீஸ்பூன்

உலர்ந்த கற்பூரவள்ளி – 1/2 டீஸ்பூன்

துருவிய சீஸ் – 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • கொத்தமல்லியை     பொடியாக நறுக்கி    கொள்ளவும்.
  • பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் வெதுவெதுப்பாக சூடேற்றி இறக்க     வேண்டும்.
  • பின் அதில் ஓட்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
  • அடுத்து அதில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி நன்கு கிளறி விட     வேண்டும்.
  • பின்னர் அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடானதும், அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஆம்லெட் போன்று ஊற்றி, அதன் மேல் உலர்ந்த கற்பூரவள்ளி, சிறிது சீஸ் மற்றும் கொத்தமல்லியை தூவி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் ரெடி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here