Home மகளிர் மட்டும் சத்தான சுவையான சைடிஷ் பாலக் தால்

சத்தான சுவையான சைடிஷ் பாலக் தால்

41
0

சத்தான சுவையான சைடிஷ் பாலக் தால்

தேவையானபொருட்கள் :

பாலக்கீரை – 1 கட்டு
துவரம் பருப்பு – கால் கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பற்கள்
சாம்பார் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகாய் பொடி – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – 1/2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :

  • தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
    பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • துவரம் பருப்புடன் தண்ணீர், சிறிது மஞ்சள், பூண்டு, எண்ணெய் சேர்த்து மசிய வேக வைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு சீரகம் தாளித்த பின்னர் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • 2 நிமிஷம் கழித்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் பொடி,சிறிது உப்பு சேர்த்துவதக்கவும்.
    தக்காளி மசிய வெந்ததும், சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கீரையை சேர்த்து கலந்து வேகவிடனும்.
    தண்ணீர் சேர்க்க வேண்டாம். கீரை வேகும்போது விடும் நீரே போதுமானதாக இருக்கும். கீரை நன்றாக வெந்தததும் வேகவைத்த பருப்பு தேவையான உப்பு சேர்த்து கலந்து வேகவிடவும்.
  • கரண்டி அல்லது மத்து கொண்டு நல்லா மசித்து விட்டு கீரை வெந்து குழம்பு கொதிக்கும் போது தீயை அணைச்சுட்டு சூடான சாதத்துடன் பரிமாறவும். சத்தான பாலக் தால் ரெடி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here