Home மகளிர் மட்டும் சத்தான சுவையான குதிரைவாலி இடியாப்பம்

சத்தான சுவையான குதிரைவாலி இடியாப்பம்

42
0

சத்தான சுவையான குதிரைவாலி இடியாப்பம்

தேவையான    பொருட்கள் :

குதிரைவாலி அரிசி – அரை கிலோ,

உப்பு – ஒரு     தேக்கரண்டி,

நல்லெண்ணெய் – ஒரு     தேக்கரண்டி,

தேங்காய்த்துருவல் – கால் கப்,

நாட்டுச் சர்க்கரை – 4 மேஜைக்கரண்டி.

செய்முறை:

  • குதிரைவாலி அரிசியைக் கழுவி ஒரு மணி நேரம் ஊறவைத்து, பின் நீரை வடித்துவிட்டு நிழலில் ஆறவிட்டு மெஷினில் கொடுத்து, மாவாக அரைத்துக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மாவு எடுத்து, வெதுவெதுப்பான நீரில் எண்ணெய், உப்பு சேர்த்து சிறிது சிறிதாக ஊற்றிப்     பிசைந்துகொள்ளவும்.
  • இடியாப்ப அச்சில் மாவைப் போட்டுப் பிழிந்து, ஆவியில் வேகவிட்டு எடுத்தால், இடியாப்பம்     தயார்.
  • வெல்லம், தேங்காய்த்துருவல் தூவிப் பரிமாறவும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here