Home மகளிர் மட்டும் சத்தான சுவையான கீரை போண்டா தயார்

சத்தான சுவையான கீரை போண்டா தயார்

46
0

சத்தான சுவையான கீரை போண்டா தயார்

என்னென்ன தேவை?

அரைக்கீரை – 1 கட்டு (நறுக்கியது)
சின்னவெங்காயம் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது)
கடலை மாவு – 150 கிராம்
பச்சரிசி மாவு – 3 ஸ்பூன்
இஞ்சி – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
சர்க்கரை வள்ளிக்கிழங்கு – 1

எப்படிச் செய்வது?

பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கீரை, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை போட்டு நன்கு கிளறவும். வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை, வதக்கிய கீரை கலவையுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து, சிறிய உருண்டைகளாக உருட்டவும். அரிசி மாவுடன், கடலை மாவு, உப்பு சேர்த்து கரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, மாவில் உருண்டைகளை நனைத்து போடவும். வெந்ததும் எடுத்து சாப்பிட்டு பாருங்க… டேஸ்ட் பிய்ச்சுறும். குழந்தைங்களுக்கு இந்த டேஸ்ட் ரொம்ப பிடிக்கும்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here