Home மகளிர் மட்டும் சத்தான காலை உணவு அவல் பொங்கல்

சத்தான காலை உணவு அவல் பொங்கல்

41
0

சத்தான காலை உணவு அவல் பொங்கல்

தேவையான பொருட்கள் :

அவல் – 1 1/2 டம்ளர்

பாசிப்பருப்பு – 1/2 டம்ளர்

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம் – சிறிதளவு

கொத்தமல்லி – அலங்கரிக்க

தாளிக்க :

எண்ணெய் – 1 தேக்கரண்டி

நெய் – 2 தேக்கரண்டி

மிளகு – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

பச்சைமிளகாய் – 2

இஞ்சி – 1 துண்டு

முந்திரிப்பருப்பு – 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை :

  • இஞ்சி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • அவலை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் 5 நிமிடம் ஊற வைத்து பின்னர் தண்ணீர் நன்றாக பிழிந்து விட்டு தனியாக வைக்கவும்.
  • பாசிப்பருப்பை உதிர் உதிராக வேக வைக்கவும். அல்லது இரண்டு விசில்கள் வருமாறு குக்கரில் வேக  வைக்கவும்.
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்ட தாளித்து பின்னர் அவல் சேர்த்து     வதக்கவும்.
  • அடுத்து அதில் வேக வைத்து வைத்துள்ள பாசிப்பருப்பினை சேர்த்து அதனுடன் உப்பு, காயம் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.
  • பொங்கல் தயாரானதும் இன்னும் சிறிது நெய் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவிப்     பரிமாறவும்.

கூடுதல்   குறிப்புகள்:

  •  திடமான அவலைப் பயன்படுத்த வேண்டும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here