Home மகளிர் மட்டும் குழந்தைகளுக்கு சத்தான ராகி டிக்கி

குழந்தைகளுக்கு சத்தான ராகி டிக்கி

49
0

குழந்தைகளுக்கு சத்தான ராகி டிக்கி

தேவையான பொருட்கள் :

ராகி மாவு – கால் கப்
உருளைகிழங்கு – 1
பட்டாணி – கால் கப்
ஸ்வீட் காரன் – கால் கப்
கேரட் – 1
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
சீரகபொடி – 1 ஸ்பூன்
கொத்தமல்லித் தழை – சிறிது
பிரட் தூள் – தேவையான அளவு
உப்பு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

  • காய்கறிகளை (கேரட், உருளைக்கிழங்கு, ஸ்வீட் கார்ன், பட்டாணி) பொடியாக நறுக்கி குக்கரில் வேக வைத்து கொள்ளவும்.
  • ராகி மாவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
  • வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேக வைத்து இருக்கும் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் சீரகத்தூள், மிளக்காய் பொடி, உப்பு போட்டு வதக்கி மசித்து விடவும்.
  • கலவை ஆறிய பின் ராகி மாவு போட்டு பிசைந்து, சப்பாத்தி மாவு பதத்தில் இருக்கும் கலவையில் சிறிது உருண்டை எடுத்து வட்ட வடிவமாக தட்டி பிரட் தூளில் பிரட்டி வைக்கவும்.
  • ஒரு தவாவில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் டிக்கிகளை அடுக்கி வைத்து பொரித்து பொன்னிறமாக எடுக்கவும்.
  • சூப்பரான ராகி டிக்கி ரெடி.
  • வெளியில் கிரிஸ்பி ஆகவும் உள்ளே soft ஆக மிகவும் ருசியாக இருக்கும் இந்த டிக்கி குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். தக்காளி சாஸ் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here