Home மகளிர் மட்டும் குழந்தைகளுக்கு கோதுமை – கேரட் தோசை

குழந்தைகளுக்கு கோதுமை – கேரட் தோசை

50
0

குழந்தைகளுக்கு கோதுமை – கேரட் தோசை

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 கப்
துருவிய கேரட் – ¾ கப்,
சீரகம் – ¼ டீஸ்பூன்,
பெருங்காயம் – ¼ டீஸ்பூன்,
வெங்காயம் – 1
உப்பு – தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை :

  • கோதுமை மாவில் சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
  • வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், சிறிது உப்பு சேர்த்து வதக்கி தோசை மாவில் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
  • தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஒரு கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி தோசையை மூடி வைத்து சுடவும். ஒரு புறம் வெந்ததும், மறுபுறம் திருப்பி விட்டு வெந்ததும் எடுக்கவும்.
  • சத்தான குழந்தைகளுக்கு கோதுமை – கேரட் தோசை ரெடி.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here