Home மகளிர் மட்டும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் தயிர் பச்சடி

உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் தயிர் பச்சடி

48
0

உடலுக்கு குளிர்ச்சி தரும் பூசணிக்காய் தயிர் பச்சடி

தேவையான பொருட்கள் :

பூசணிக்காய் – 200 கிராம்
தயிர் – அரை கப்
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
கடுகு, உளுந்து – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • பூசணிக்காயை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
  • இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • துருவிய பூசணிக்காயை மெல்லிய துணியில் வைத்துச் சாறு இல்லாமல் நன்றாகப் பிழிந்து வைத்துக்கொள்ளவும்.
  • துருவிய பூசணிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுந்து சேர்த்துத் தாளித்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சியைச் சேர்த்து ஒரு புரட்டு புரட்டிக் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை கிளறி இறக்கி பூசணிக்காயில் கலக்கவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து உடனே பரிமாறவும்.
  • சூப்பரான பூசணிக்காய் தயிர் பச்சடி ரெடி.
  • இந்தப் பச்சடி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் மட்டுப்படும்.
  • பூசணிக்காயில் இருந்து பிழிந்தெடுத்த சாற்றுடன் தயிர், இஞ்சி, பச்சை மிளகாய், பெருங்காயம், மல்லித் தழை சேர்த்துப் பானகமாகக் குடிக்கலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here