Home மகளிர் மட்டும் அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா

அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா

41
0

அருமையான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா

தேவையான பொருட்கள் :

இறால் – 200 கிராம்
தக்காளி – 1
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
சோம்பு தூள் – அரை ஸ்பூன்
கரம்மசாலா தூள் – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – அரை ஸ்பூன்
தனியா தூள் – கால் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பஜ்ஜி மாவு – 1 கப்
அரிசி மாவு – 3 ஸ்பூன்.

செய்முறை :

  • தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் பஜ்ஜி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
  • இறாலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்றாக வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • அடுத்து அதில் இறால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இறால் நன்றாக வெந்ததும் அதில் கொத்தமல்லி தழை தூவி இறக்கி அதை பஜ்ஜி மாவில் போட்டு நன்றாக கலக்கவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்துள்ள மாவை டீஸ்பூன் எடுத்து சிறிது சிறிதாக ஊற்றவும்.
  • வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
  • சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் இறால் பக்கோடா ரெடி.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here