Home யாவரும் நலம் பருப்பு கீரையை கொண்டு வறண்ட சருமத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

பருப்பு கீரையை கொண்டு வறண்ட சருமத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

22
0

பருப்பு கீரையை கொண்டு வறண்ட சருமத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: சோற்றுக் கற்றாழை, பருப்பு கீரை.

செய்முறை:

சோற்று கற்றாழை பசை, பருப்பு கீரை பசையை ஆகியவற்றை கலந்து எடுத்துக்கொள்ளவும். இந்த பசையை வறண்ட சருமம் உள்ள இடத்தில் பூசிவர வறண்ட சருமம் மாறி பொலிவு பெறும். இது குளிர்ச்சி தரக்கூடியதாக விளங்குகிறது. தோலுக்கு மென்மை உண்டாகும். எரிச்சலுக்கு காரணமான வறண்ட சருமம், வெடிப்பு ஆகியவற்றை பருப்பு கீரை குணப்படுத்துகிறது. விட்டமின் சி அதிகம் உள்ள இது தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. பருப்பு கீரை குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் புண்களை ஆற்றி எரிச்சலை போக்குகிறது. சிறுநீரை பெருக்கும் தன்மை கொண்டது. ஈரலுக்கு பலம் தரக்கூடியது. இரும்பு, கால்சியம் உள்ளிட்ட சத்துக்களை உடைய இது உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. கண்களுக்கு தெளிவான பார்வையை தரக்கூடியது. வாரம் ஒருமுறையெனும் பருப்பு கீரையை உணவில் சேர்த்துவர பலநோய்களை விலக்கி வைக்கலாம். கால் ஆணிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். இப்பிரச்னைக்கு குண்டுமல்லி, மஞ்சள் ஆகியவை மருந்தாகிறது. குண்டுமல்லி இலையை அரைத்து, அதனுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கால் ஆணியின் மீது கட்டி வைத்தால் வெகு சீக்கிரத்தில் கால் ஆணி சரியாகும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here