Home யாவரும் நலம் வள்ளிக்கிழங்கை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் உணவு தயாரிக்கலாம்

வள்ளிக்கிழங்கை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் உணவு தயாரிக்கலாம்

48
0

வள்ளிக்கிழங்கை பயன்படுத்தி உடல் எடையை அதிகரிக்கும் உணவு தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: வள்ளிக்கிழங்கு, நெய், தேங்காய் துருவல், சுக்குப்பொடி, வெல்லம்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றவும். இதனுடன் வேகவைத்த மசித்த வள்ளிக்கிழங்கு, தேங்காய் துருவல், வெல்லம், சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். உடல் எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை சாப்பிட்டுவர உடல் எடை அதிகரிக்கும். வள்ளிக்கிழங்கில் உள்ள புரதம், மாவு, இனிப்பு சத்து ஆகியவை குளிர்ச்சி தந்து உடலுக்கு பலம் தரக்கூடியதாக விளங்குகிறது.

வள்ளிக்கிழங்கு உடல் உஷ்ணத்தை தணிக்கும். சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை சரிசெய்ய கூடியதாகிறது. சிறுநீரை சீராக வெளித்தள்ளும். சிறுநீர் தாரையில் ஏற்படும் தொற்றுக்களை விலக்கும். குடலின் அடிப்பகுதியில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது. வள்ளிக்கிழங்கை குழந்தைகளுக்கு திண்பண்டம் போன்று செய்து கொடுப்பது நல்லது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here