Home யாவரும் நலம் வயிற்றுப்புண் ஆற்றவும்,கண்பார்வைக்கு உதவும் முளைக்கீரை பற்றி தெரிந்துகொள்ளலாம்

வயிற்றுப்புண் ஆற்றவும்,கண்பார்வைக்கு உதவும் முளைக்கீரை பற்றி தெரிந்துகொள்ளலாம்

49
0

வயிற்றுப்புண் ஆற்றவும்,கண்பார்வைக்கு உதவும் முளைக்கீரை பற்றி தெரிந்துகொள்ளலாம்

முளைக்கீரை வயிற்றுப்புண்ணை ஆற்றுவதில் முன்னணியில் இருக்கிறது. கண்பார்வையை கூர்மையாக்கக்கூடியது. இந்த கீரையில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்து நிறைந்துள்ளது. முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, நார்ச்சத்தும், மாவுச்சத்தும் குறிப்பிடும் அளவுகளில் உள்ளது. அதனால், உடல் வலுவடையும், வளரும் சிறுவர்களுக்கு இந்த கீரையை தொடர்ந்து கொடுத்தால் உடல் நல்ல வளர்ச்சி அடையும்.

முளைக்கீரையின்   மருத்துவ பயன்கள் :

1 இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்துவதோடு, இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முளைக்கீரை அதிமதுரம் (ஒரு துண்டு), மஞ்சள் (3 சிட்டிகை) மூன்றையும் சேர்த்து கஷாயமாக செய்து சாப்பிட்டால் எப்படிப்பட்ட இருமலும் குணமாகும்

2 முளைக்கீரையுடன் சீரகத்தை நெய்யில் வறுத்து, சேர்த்து, மிளகாய் வற்றலை கிள்ளிப்போட்டு, தண்ணீர் சேர்த்து அவித்து சாற்றை வடித்து, சாதத்தோடு கலந்து சாப்பிட்டால் அனைத்து வகையான காய்ச்சலும் குணமாகும்.

3 முளைக்கீரை, துத்திக்கீரை இரண்டையும் சம அளவு எடுத்து, சிறுபருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உள்மூலம், பவுத்திர கட்டி, ரத்த    மூலம்     போன்றவை      சரியாகும்.

4 முளைக்கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து, கொதிக்க வைத்து சாப்பிட்டால் பசியின்மை நீங்கி, நல்ல      பசி  உண்டாக்கும்.

5 முளைக்கீரையுடன் சிறிது புளிச்ச கீரை, மிளகு, மஞ்சள், உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால் ருசியின்மை குறைபாடு நீங்கும்.

வறண்ட சருமத்துக்கு மருந்தாகும் பருப்பு கீரையை பற்றி பார்க்கலாம் :

தோட்டத்தில், சாலையோரங்களில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு எளிதான, பாதுகாப்பான மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வயிற்றுபோக்கு, வெள்ளைபோக்கு, புண்கள், வறண்ட சருமம் போன்றவற்றுக்கு மருந்தாகும் பருப்பு கீரையின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பறவைகள் விரும்பி உண்ணக் கூடியது பருப்பு கீரை. இது, நுண்கிருமிகளை போக்க கூடியது. நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. பருப்பு கீரையை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருத்துவத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பருப்பு கீரை, தயிர். பருப்பு கீரையை சுத்தப்படுத்தி பசையாக அரைத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும்போது வயிற்றுபோக்கு, சீத கழிச்சல் சரியாகும். வெள்ளைப்போக்கு காரணமாக பலவீனம், அசதி ஏற்படுவதுடன் உடல் மெலியும். இந்நிலையில், பருப்பு கீரையை தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர பெண்களுக்கு தேவையான சத்து கிடைக்கும். வெள்ளைபோக்கு பிரச்னை சரியாகும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here