Home யாவரும் நலம் முருங்கைக் காய் எதுக்கெல்லாம் நல்லது?

முருங்கைக் காய் எதுக்கெல்லாம் நல்லது?

40
0

முருங்கைக் காய் எதுக்கெல்லாம் நல்லது?

1. சளித் தொல்லை நீங்கும்

முருங்கைக் காயில் வைட்டமின் சி உள்ளது. தொண்டை வறட்சி, சளி போன்ற பிரச்னையால் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் அதை சரி செய்ய முருங்கை சூப் தயாரித்து சாப்பிட்டால் உடனடி நிவாரணம் கிடைக்கும். முருங்கைக் கீரையும் மருத்துவ குணம் கொண்டது. கீரையைப் பொரியல் அல்லது மசியல் செய்து அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஆஸ்துமா, வீசிங் போன்ற எந்த சுவாசப் பிரச்னைகளும் நெருங்காது.

2. எலும்பு வலுவாகும்

இரும்புச் சத்து, வைட்டமின்கள் மற்றும் கால்ஷியம் முருங்கைக் கீரையில் அதிகளவு உள்ளது. முருங்கைக் கீரையை மசித்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர ரத்தம் சுத்தீகரிக்கப்படும். முருங்கைக் காய் உடலிலுள்ள எலும்புகளை நன்றாக வலுவடையச் செய்து தெம்புடன் இருக்க உதவும்.

3. கர்ப்பிணிகளுக்கு நல்லது

கர்ப்பிணிகளுக்குத் தேவையான இரும்புச் சத்து, கால்ஷியம் மற்றும் வைட்டமின்கள் அனைத்தும் முருங்கையில் உள்ளன. முருங்கை டானிக், முருங்கைக் காய் மற்றும் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் சுகப் பிரசவம் ஆவது உறுதி. தவிர பிரசவத்துக்குப் பின் உடல் பழைய நிலைக்கு விரைவில் திரும்பவும் முருங்கை மருத்துவம் உதவும். முருங்கைக் கீரையை உப்பு போட்டு வேக வைத்து, நீரை வடிகட்டி, அதைக் கடைந்து, சாதத்தில் சிறிது நெய் ஊற்றிப் பிசைந்து தினமும் சாப்பிட்டு வந்தால் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

6. இரும்புச் சத்து

முருங்கைச் சாறு குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அதில் அவர்களுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைத்துவிடும். எலும்பு வளர்ச்சிக்கும் உறுதிக்கும் முருங்கை மிகவும் நல்லது. ரத்தத்தை சுத்திகரீக்கும், முருங்கையில் கால்ஷியம், இரும்பு மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதிகம் உள்ளதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நல்லது.

7. நுரையீரல் பிரச்னைகள்

முருங்கைக் காய் ஆஸ்துமா சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு நல்ல மருந்தாகும். முருங்கைக் காய் போட்டு ஆவி பிடித்தால் சுவாசப் பிரச்னைகளுக்கு விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

8. சருமத்தை பளபளப்பாக்கும்

முருங்கைக்காய் சாறு சருமத்தை பளபளக்கச் செய்யும். அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி சற்று ஊற வைத்தபின் கழுவினால் முகம் பொலிவடையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பரு, கரும்புள்ளி, மரு போன்ற சரும பிரச்னைகள் குணமாகி அன்றலர்ந்த மலர் போல முகம் பிரகாசமாக இருக்கும்.

9. சர்க்கரை வியாதியை மட்டுப்படுத்தும்

1982-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 36 சர்க்கரை வியாதி நோயாளிகளை அழைத்து ஒரு ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள். அதில் முருங்கையை அடிக்கடி சாப்பிட்ட 30 நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்திருந்தது கண்டுபிடித்தார்கள்.

இது தவிர மேலும் பல பலன்களை முருங்கை காய் தருகிறது. இது எலும்பு வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் அடர்த்திக்கு மிகவும் நல்லது. புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் முருங்கை மருத்துவத்துக்கு உண்டு. குடலில் அல்சர் மற்றும் ட்யூமர் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சீர் செய்து பார்வையை தெளிவாக்கும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here