Home யாவரும் நலம் மாங்காயை பயன்படுத்தி பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.

மாங்காயை பயன்படுத்தி பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.

45
0

மாங்காயை பயன்படுத்தி பசியை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

மாங்காய், நல்லெண்ணெய், பெருங்காயப்பொடி, கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, வரமிளகாய் பொடி, உப்பு, வெல்லக்கரைசல்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயப்பொடி, கடுகு, கறிவேப்பிலை, மாங்காய் துண்டுகள், மஞ்சள் பொடி, வரமிளகாய் பொடி சேர்த்து நீர்விட்டு வேகவைத்து உப்பு சேர்க்கவும். வெல்லகரைசல் சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறவைத்தபின் சாப்பிட்டுவர பசியை தூண்டும்.

நீண்டநாள் காய்ச்சல் காரணமாக வாய்கசப்பு உள்ளவர்கள் இதை சாப்பிட கசப்பு மாறும். புளிப்புசுவை உடைய இது வயிற்றில் அமிலங்களை சுரக்க வைக்கும். மாங்காயை அளவோடு சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here