Home யாவரும் நலம் பொன்னாங்கண்ணி பற்றி தேரையர் குணபாட நூல்

பொன்னாங்கண்ணி பற்றி தேரையர் குணபாட நூல்

48
0

பொன்னாங்கண்ணி பற்றி தேரையர் குணபாட நூல்:

காசம் புகைச்சல் கருவிழிநோய் வாதமனல்கூசும் பீலிகம் குதாங்குரநோய் – பேசிவையால்என்னாங்கா ணிப்படிவம் எமமம் செப்பலென்னைப்பொன்னாங்கா ணிக்கொடியைப் போற்று’
தேரையர் குணபாடம்.

கண்காசம், கருவிழி நோய், கண் புகைச்சல், வதம், பித்தம், கூச்சமுண்டாக்கும் கோழை, வாயில் உண்டாகும் நோய்கள் போவதோடு பொன்னிறமான உடலையும் கொடுப்பதால் பொன்னாங்கண்ணியைப் போற்றியுண்ணல் வேண்டும் என்பது மேற்
கூறிய பாடலின் பொருளாகும்.

‘பொன்னாங்கண்ணி கீரையை எவ்வகையிலேனும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் மனிதர் தம் ஆயுள் நிலை பெறும். நூற்றாண்டு வாழ இயலும். கண் பார்வை தெளிவு பெறும்’ என்று வள்ளல் பெருமான் ராமலிங்க சுவாமிகளும் பொன்னாங்கண்ணியைப் பரிந்துரை செய்துள்ளார்.

‘கல்ப மருந்தாக பொன்னாங்கண்ணியை உண்டு வந்தால் பகலில்கூட நட்சத்திரங்களைப் பார்க்க இயலும்’ என்று சித்தர் பெருமக்கள் பலரும் சொல்லியுள்ளனர்.

பகலில் நட்சத்திரத்தைப் பார்த்து நாம் சாதிக்கப் போவது ஒன்றுமில்லை என்றாலும் கண்பார்வை மிகக்கூர்மையாகவும், தெளிவாகவும் பொன்னாங்கண்ணியின் மூலம் கிடைக்கும் என்பதை இதில் புரிந்துகொள்ளலாம்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here