Home யாவரும் நலம் நமக்கு எழுதில் கிடைக்க கூடிய பொன்னாங்கண்ணி கீரை பற்றி அறிந்து கொள்ளலாம்

நமக்கு எழுதில் கிடைக்க கூடிய பொன்னாங்கண்ணி கீரை பற்றி அறிந்து கொள்ளலாம்

45
0

நமக்கு எழுதில் கிடைக்க கூடிய பொன்னாங்கண்ணி கீரை பற்றி அறிந்து கொள்ளலாம் :

இறைவன் உலக உயிர்களைப் படைக்கும்போதே அவ்வுயிர்கள் வாழ பல்வேறு தாவரங்களையும் உணவாகவும் படைத்துள்ளான். முக்கியமாக, அவ்வுணவுகளே மருந்தாகவும் அமையும் வகையில் படைத்தருளியுள்ளான். அப்படிப்பட்ட முக்கிய தாவரங்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் பொன்னாங்கண்ணி கீரை.

பொன்னாங்கண்ணி கீரை நீர் நிலைகள் அருகில் அல்லது ஈரப்பதம் நிறைந்த நிலப்பகுதியில் விளையும் சிறு செடி வகையைச் சேர்ந்தது. இது நிலத்தின் மீது படர்ந்து வளரக்கூடிய ஒன்று. இலைகள் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தோடு காட்சியளிக்கும். இந்த கார்த்திகை மாதத்தில் மிகவும் செழிப்பாக வளர்ந்திருக்கும் பொன்னாங்கண்ணி, குளிர் காலத்தில் பூக்களைத் தரக்கூடியது.

இதன் பூக்கள் தோற்றத்தில் பயறு வகைகளைப் போல் காணப்படும். வெயில் காலத்தில் இச்செடி உலர்ந்து போய் மழைக்காலத்தில் அருகம்புல் போல் மீண்டும் துளிர்க்கும். உலகின் பல்வேறு நாடுகளிலும் இது உணவாகப் பயன்படுகிறது.

தமிழில் ஒவ்வொரு பெயரும் அது குறிக்கும் பொருளின் தன்மையை வெளிப்படுத்துவதாக அமையும். அந்த வகையில் பொன்னாங் கண்ணியும் அர்த்தம் பொதிந்த பெயரையே கொண்டுள்ளது என்பதில் வியப்பேதும் இல்லை. பொன் + ஆம் + காண் + நீ என்று அப்பெயரைப் பிரித்துப் பொருள் கொள்வது தகுதியுள்ளதாய் இருக்கும்.

நம் முனிவர்களும் சித்தர்களும் செம்பு, வெள்ளி, பொன் போன்ற உலோகங்களை சாம்பலாகவோ(பஸ்மம்) நீராகவோ மாற்ற இயலும் என்பதை தெரிந்து வைத்திருந்தனர். இன்றைய நவீன ஆய்வாளர்களால் கூட சாதிக்க இயலாத பல்வேறு மருத்துவ சாதனைகளை அவர்கள் செய்துகாட்டியதோடு அவற்றை சமுதாயம் பயன்படுத்தும் வகையில் ஓலைச்சுவடிகளிலும் எழுதி வைத்துச் சென்றுள்ளனர்.

பொன்னாங்கண்ணிக் கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. அதுபோலவே மஞ்சள் கரிசாலையும் பொன் சத்தை பெற்று இருக்கிறது. வெள்ளைக் கரிசாலை தன்னுள் வெள்ளிச்சத்தை நீராகப் பெற்றிருக்கிறது. இத்தாவரங்களை ஆராய்ந்த சித்தர் பெருமக்கள் உலோகங்கள் நீராகும் தன்மையது என்று தெளிந்து ஆய்வுகள் மேற்கொண்டு வெற்றியையும் கண்டனர்.

Alternanthera sessilis என்பது பொன்னாங்கண்ணியின் தாவரப் பெயர் ஆகும். Alligator weed என்பது இதன் ஆங்கிலப் பெயர் ஆகும். ‘மத்ஸ்யாக்ஷி’, ‘பிராம்மி’, ‘மத்ஸ்யகந்தா’, ‘மீனாக்ஷி’, ‘பாலி’, ‘வாலிக்கா’ என்பவை இதன் ஆயுர்வேதப் பெயர்கள் ஆகும். தமிழில் பொன்னாம் கண்ணி என்ற பெயருடன் ‘கொடுப்பை’, ‘சீதை’ என்றும் குறிக்கப்படும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here