Home யாவரும் நலம் சூடான சாப்பாடு எப்பொழுதும் வேண்டுமா? வார்மிங் ட்ராயர் வாங்கலாமே

சூடான சாப்பாடு எப்பொழுதும் வேண்டுமா? வார்மிங் ட்ராயர் வாங்கலாமே

43
0

சூடான சாப்பாடு எப்பொழுதும் வேண்டுமா? வார்மிங் ட்ராயர் வாங்கலாமே :

வீட்டுச் சாப்பாட்டை போல் சுவையானது இல்லை. ஆனால் வீட்டில் எப்பொழுதும் சூடாக சாப்பிட முடிவதில்லை. அதுவும் விருந்து போன்ற நேரங்களில் கடைசியாக செய்யும் உணவே சூடாக இருக்கும். கஷ்டமான உணவை முதலில் செய்து வைத்துக் கொள்ளலாம் என்றால் அது சூடு ஆறி விடுமோ என்ற வருத்தம் வரும். செய்த உணவை மீண்டும் சூடு செய்யும் போது அதன் சுவை, மணம் மற்றும் திடமுமே மாறி விடுகிறது. இப்பிரச்சினைக்கான தீர்வு தான் வார்மிங் ட்ராயர் என்ற சாதனம்.

இது உணவை சூடாகவும், அதன் நீர்பதம் மற்றும் மொறுமொறுப்புத் தன்மை கெடாமலும் பாதுகாக்கிறது. இது சிறு சிறு அறைகளாக அடுப்பின் கீழோ, மைக்ரோ வேவ்வின் கீழோ வைத்துக் கொள்ள ஏதுவாக தயாரிக்கப்படும் சாதனம். உணவை நான்கு மணி நேரங்களுக்கும் மேலாக இது சூடாக வைத்து கொள்ளும். மேலும் இந்த வார்மில் ட்ராயர் வெதுவெதுப்பான ஈரப்பதம் உள்ள உணவை உலர்ந்து போகாமலும், வறண்ட மொறுமொறு உணவை அதே தன்மையோடும், மென்மையான பொருளை கெட்டியாகாமலும், நன்கு வெந்த பொருளும் மேலும் தீய்ந்து விடாமலும் பார்த்துக் கொள்கிறது.

வார்மிங் ட்ராயரை அடுப்பின் கீழே பொருத்திக் கொள்ள வேண்டும். இது 30 முதல் 85 டிகிரி செல்ஷியஸ் வரையிலான சூட்டில் உணவை வைத்துக் கொள்கிறது. இதன் உட்புறத்தில் வெளியே எடுத்து வைத்துக் கொள்ளக்கூடிய கிண்ணங்கள், தடுப்புகள், தனித்தனி மூடிகள், ‘ரேக்’குகள் இருக்கும். இவற்றில் உணவுப் பொருட்களை தனித்தனியே வைத்து சூடுபடுத்திக் கொள்ளலாம்.

இந்த வார்மிங் ட்ராயரில் உணவுகள் மட்டுமின்றி செராமிக் கப், தட்டு, பவுல் போன்றவைகளையும் வைத்துக் கொள்ளலாம். சுகாதாரமாக சாப்பிடும் தட்டு டம்ளர்களை வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. சிலர் குடிநீரை சூடாக வைத்துக் கொள்வதற்கும், காபி டீ போன்ற பானங்களை பின்னர் அருந்துவதற்காகவும் கூட இதை உபயோகித்துக் கொள்கின்றனர்.

வார்மிங் ட்ராயர் சுலபமாக உபயோகிக்கும் வகையில் சிறு அறைகளாக கொடுக்கப்படுகிறது. இது பால் பேரிங் மூலம் சுலபமாக உருளும் வகையில் இருப்பதால் மைக்ரோவேவ் போலில்லாமல் திறந்து வைக்கவும் எடுக்கவும் சுலபமாக இருக்கிறது. இது நம் மாட்யூலர் கிச்சன் கேபினட்டிற்கு பொருந்தும் விதத்தில் பல நிறங்களிலும், பல வடிவங்களிலும் பல அளவுகளிலும் கிடைக்கிறது.

எனவே பார்க்க அழகாகவம் கச்சிதமாகவும் சமையலறையில் பொருந்தி விடுகிறது. வார்மிங் ட்ராயரை எந்த சமையலறையிலும் கேஸ் அடுப்பிற்கு கீழாகவோ, மைக்ரோவேவ் அடுப்பிற்கு கீழாகவோ, இன்டக்‌ஷன் அடுப்பிற்கு கீழாகவும் பொருத்திக் கொள்ளலாம். இதன் மேற்புறத்தில் நமக்கு தேவையான சூட்டில் வைத்துக் கொள்ள தேர்ந்தெடுக்க பல நாப்புகள், தெர்மோஸ்டாட் மற்றும் டைமர் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை சரியாக உபயோகிக்க தெரிந்துக் கொண்டால் எப்பொழுதுமே சூடான சுவையான உணவு நமக்கும் கிடைக்கும்.

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here