Home யாவரும் நலம் உடலுக்கு பலம் தரும் வள்ளிக்கிழங்கு

உடலுக்கு பலம் தரும் வள்ளிக்கிழங்கு

46
0

உடலுக்கு பலம் தரும் வள்ளிக்கிழங்கு 

நமக்கு எளிதில், அருகில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப்பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை போக்க கூடியதும், சிறுநீர்தாரையில் ஏற்படும் எரிச்சலை போக்கும் தன்மை கொண்டதும், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியதுமான வள்ளிக்கிழங்கின் மருத்துவ குணத்தை பற்றி பார்க்கலாம்.பல்வேறு நன்மைகளை கொண்ட வள்ளிக்கிழங்கை அடிக்கடி சாப்பிடுவதால் புற்றுநோய் வராமல் தடுக்கப்படும். இதில், வைட்டமின் சி, மாவுச்சத்து உள்ளது. வேகவைத்த வள்ளிக்கிழங்கு இனிப்பு சுவையை தருகிறது. உடலுக்கு பலம் கொடுக்க கூடியது. மூட்டுவலியை போக்கும் தன்மை கொண்டது.

வள்ளிக்கிழங்கு இலைகளை பயன்படுத்தி புண்களை ஆற்றும் மருந்து தயாரிக்கலாம். வள்ளிக்கிழங்கு இலைகளை நீர்விட்டு அலசி எடுக்கவும். இதை பூச்சிக்கடி, வண்டுக்கடி ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டிவைத்தால் வலி குணமாகும். புண்களை ஆற்றும் மருந்தாக வள்ளிக்கிழங்கு விளங்குகிறது. வள்ளிக்கிழங்கின் இலைகளை நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி இளஞ்சூட்டுடன் கழுவதன் மூலம் புண்கள் விரைவில் ஆறும். வள்ளிக்கிழங்கு இலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இது பூஞ்சை காளான்களை போக்க கூடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here