Home யாவரும் நலம் அருகம்புல்லை பயன்படுத்தி வறண்ட சருமத்தை மாற்றும் மருந்து தயாரிக்கலாம்.

அருகம்புல்லை பயன்படுத்தி வறண்ட சருமத்தை மாற்றும் மருந்து தயாரிக்கலாம்.

48
0

அருகம்புல்லை பயன்படுத்தி வறண்ட சருமத்தை மாற்றும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

அருகம்புல் சாறு, பசு வெண்ணெய்.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பசு வெண்ணெய் எடுக்கவும். இதனுடன் சமஅளவு அருகம்புல் சாறு சேர்த்து காய்ச்சினால் நெய் பதத்தில் வரும். இதை, இரவு தூங்கப்போகும் முன்பு வறண்ட சருமம் இருக்கும் இடத்தில் பூசி காலையில் குளித்துவர வறண்ட சருமம் பிரச்னை விரைவில் மாறும். காயம் ஏற்பட்டால் அருகம்புல்லை அரைத்து போடும்போது ரத்தம் நின்று காயம் ஆறும்.புளிஏப்பம், வயிறு உப்புசத்துக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாத நிலை, குடலில் தேங்கியிருக்கும் அமிலம் வெளியேறுவதால் இப்பிரச்னைகள் ஏற்படுகிறது. இதற்கு வாழை பிஞ்சு மருந்தாகி பலன் தருகிறது. வாழை பிஞ்சுகளை நறுக்கி காயவைத்து பொடித்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். புளிஏப்பம் ஏற்படும்போது இதிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து கால் பங்கு உப்பு சேர்த்து சாப்பிட்டால் வயிறு உப்புசம், புளி ஏப்பம், வயிறு எரிச்சல், பசியின்மை போன்றவை சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here