Home யாவரும் நலம் அரிசி திப்பிலியை பயன்படுத்தி ஜீரணத்தை தூண்டும் ரசம் தயாரிக்கலாம்.

அரிசி திப்பிலியை பயன்படுத்தி ஜீரணத்தை தூண்டும் ரசம் தயாரிக்கலாம்.

59
0

அரிசி திப்பிலியை பயன்படுத்தி ஜீரணத்தை தூண்டும் ரசம் தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

அரிசி திப்லி, தனியா, வரமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, நல்லெண்ணெய், பெருங்காயம், கடுகு, மஞ்சள் பொடி, மிளகுத்தூள், சீரகப்பொடி, புளிகரைசல், தக்காளி, உப்பு, கொத்துமல்லி.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தனியா, 10 அரிசி திப்லி, ஒரு வரமிளகாய், கருவேப்பிலை, இஞ்சி சேர்த்து வறுத்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்தவுடன் பெருங்காயம் சேர்க்கவும். கடுகு சேர்த்து அது பொறிந்தவுடன், ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் கலவையை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, மிளகுத்தூள், சீரகப்பொடி சேர்த்து வதக்கவும். பின்னர், புளிகரைசல், தக்காளி சேர்க்கவும்.

இதில் நீர்விட்டு உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த ரசத்தை குடித்துவர வயிற்றில் இருக்கும் வாயு வெளியேறும். ஜீரணத்தை தூண்டும். சளியை போக்கும். இருமலை அகற்றும். உள் உறுப்புகளை தூண்டி ஆரோக்கியத்தை கொடுக்கும். தினமும் இந்த ரசத்தை சாப்பிட்டு வருவது உடல் நலத்துக்கு நன்மை தரும்.

வியர்வையினால் உண்டாகும் உடல் துர்நாற்றத்தை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். அதிக பணி செய்பவர்கள், உடல் எடை அதிகம் உள்ளவர்களுக்கு வியர்வை அதிகளவில் வெளியாகும். எலுமிச்சை சாற்றை சிறிது நேரம் அக்குள்களில் தடவி குளிப்பதாலும், குளிக்கும் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை கலந்து குளிப்பதால் துர்நாற்றம் விலகிப்போகும்.

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here